மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம்

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம் கண்ணிவெடிநடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரப்பூர்வமாக சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் ஓர் பன்னாட்டு இலாப நோக்க ஓர் அமைப்பாகும். இவ்வமைபபனது ஏப்ரல் 1998 இல் சுவிட்சர்லாந்திலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உருவாக்கப்பட்டது. மார்ச் 2003 இல் சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதன் மூலம் சுயமாகவும் சுயாதீனமாகவும் முடிவெடிக்கும் தன்மையை உறுதிப்படுத்துக் கொண்டது. இந்நிலையமானது 40 அளவிலான ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன் 20 நாடுகளுடன் பன்னாட்டு அமைப்புக்களுடான ஆதரவில் இயங்கிவருகின்றது.

நோக்கம்

தொகு

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம் கண்ணிவெடிகளை இல்லாதொழிப்பதற்கும் கண்ணிவெடிகள், யுத்ததில் கைவிடப்பட்ட வெடிபொருள் மீதிகள் போன்றவற்றில் இருந்து மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதிலும் ஈடுபடுகின்றனர்.

நிபுணத்துவம்

தொகு

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம் கண்ணிவெடி நடவடிக்கையின் வினைத்திறனையும் நிபுணத்துவத்தையும் கூட்டும் வண்ணம் மற்றவர்களுடன் கூட்டிணைந்து, திட்டங்களுக்கு உதவியளித்து, அறிவுப்பூர்வமான விடயங்களை உருவாக்கிப் பகிர்ந்து , நிர்வாக நியமங்களையும் தரத்தையும் உயர்த்தி உதவிவருகின்றது. மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையத்தின் மென்பொருட்கள் ஐக்கிய நாடுகள் ஏனைய அமைப்புக்களால் வினியோகிக்கப்படுகின்றது. கண்ணிவெடி நடவடிக்கையில் மருத்துவ உதவி தவிர்ந்த மற்ற எல்லா முக்கியமான விடயங்களிலும் இந்நிலையம் ஆதரவளித்துவருகின்றது. இந்நிலையம் கண்ணிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகள், வெடிக்காத வெடிபொருட்கள், கொத்துக் குண்டுகள் உட்பட எல்லா யுத்ததில் கைவிடப்பட்ட வெடிபொருள் மீதிகளைப் பற்றிய திறமையைக் கொண்டுள்ளது. மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம் ஆபத்துதவியுடன், புனருத்தாரணம், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் அவிருத்திச் செயற்பாடுகளிற்கும் ஆதரவளித்து வருகின்றனர். இதை பாதிக்கப்பட்ட நாடுகளில் அவர்கள் நாட்டுடமையாக்குவதுடன் உள்ளூர் திறமைகளை வளர்தெடுப்பதிலும் ஈடுபடுகின்றனர்.

பங்காளிகள்

தொகு

இந்நிலையத்தின் பிரதான பங்காளிகளாவன கண்ணிவெடிநடவடிக்கையில் ஈடுபடும் தேசிய அரசுகள், பன்னாட்டு, பிராந்திய அமைப்புக்கள், உள்ளூர் பன்னாட்டு அரசு அல்லா அமைப்புக்கள், ஆய்வு நிலையங்கள், வணிக நிறுவனங்கள் ஆகும்.

பணிபுரியும் பகுதிகள்

தொகு

ஜெனிவா பன்னாட்டு நிலையம் தேசிய அரசுடன் கூடி கண்ணிவெடி நடவடிக்கையின் முக்கியமான பகுதிகளை ஆதரவளித்து வருகின்றது. இப்பணிகள் அந்த இடத்திலோ அல்லது தொலைவில் இருந்த வண்ணமும் ஆதரவளிக்கின்றனர்.