மனித உடலில் உள்ள தனிமங்கள்
சராசரியாக 70 கிலோகிராம் எடை உள்ள ஒரு மாந்தனின் உடல் எவ்வெவ் தனிமங்களால் எவ்விகிதத்தில் ஆக்கப்பட்டுள்ளது என்று காட்டும் பட்டியல். மாந்தனின் உடலில் எடையளவில் (நிறை அல்லது திணிவு என்றும் கொள்வதுண்டு) 65-90% நீர்தான் (H2O). மீதம் உள்ளதில் மிகப்பெரும்பாலானவை கரிமம் உள்ள கரிமவேதிப் பொருட்களால் ஆனவை. மனித உடலில் 99% ஆறே ஆறு தனிமங்களால் ஆனவையே. அவை ஆக்ஸிஜன், கரிமம், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் ஆகும்.
தனிமம் | விழுக்காடு (%)[1] | Mass (kg)[2] |
---|---|---|
ஆக்ஸிஜன் | 65 | 43 |
கரிமம் | 18 | 16 |
ஹைட்ரஜன் | 10 | 7 |
நைட்ரஜன் | 3 | 1.8 |
கால்சியம் | 1.5 | 1.0 |
பாஸ்பரஸ் | 1 | 0.780 |
பொட்டாசியம் | 0.25 | 0.140 |
கந்தகம் | 0.25 | 0.140 |
குளோரின் | 0.15 | 0.095 |
சோடியம் | 0.15 | 0.100 |
மக்னீசியம் | 0.05 | 0.019 |
இரும்பு | 0.006 | 0.0042 |
ஃவுளூரின் | 0.0037 | 0.0026 |
துத்தநாகம் | 0.0032 | 0.0023 |
சிலிக்கான் | 0.002 | 0.0010 |
சிர்க்கோனியம் | 0.0006 | 0.000001 |
ருபீடியம் | 0.00046 | 0.00068 |
ஸ்ட்ரோன்ஷியம் | 0.00046 | 0.00032 |
புரோமின் | 0.00029 | 0.00026 |
ஈயம் | 0.00017 | 0.00012 |
நையோபியம் | 0.00016 | 0.0000015 |
செப்பு | 0.0001 | 0.000072 |
அலுமினியம் | 0.000087 | 0.000060 |
காட்மியம் | 0.000072 | 0.000050 |
போரான் | 0.000069 | 0.000018 |
சீரியம் | 0.000040 | |
பேரியம் | 0.000031 | 0.000022 |
ஆர்செனிக் | 0.000026 | 0.000007 |
வனேடியம் | 0.000026 | 0.00000011 |
வெள்ளீயம் | 0.000024 | 0.000020 |
பாதரசம் | 0.000019 | 0.000006 |
செலீனியம் | 0.000019 | 0.000015 |
மாங்கனீசு | 0.000017 | 0.000012 |
அயோடின் | 0.000016 | 0.000020 |
தங்கம் | 0.000014 | 0.0000002 |
நிக்கல் | 0.000014 | 0.000015 |
மாலிப்டினம் | 0.000013 | 0.000005 |
ஜெர்மானியம் | 0.000005 | |
டைட்டேனியம் | 0.000013 | 0.000020 |
டெலூரியம் | 0.000012 | 0.0000007 |
ஆண்ட்டிமனி | 0.000011 | 0.000002 |
லித்தியம் | 0.0000031 | 0.000007 |
குரோமியம் | 0.0000024 | 0.000014 |
சீசியம் | 0.0000021 | 0.000006 |
கோபால்ட் | 0.0000021 | 0.000003 |
வெள்ளி | 0.000001 | 0.000002 |
லாந்த்தனம் | 0.0000008 | |
காலியம் | 0.0000007 | |
யுரேனியம் | 0.00000013 | 0.0000001 |
பெரிலியம் | 0.000000005 | 0.000000036 |
ரேடியம் | 0.00000000000000001 | |
இற்றியம் | 0.0000006 | |
பிஸ்மத் | 0.0000005 | |
தாலியம் | 0.0000005 | |
இண்டியம் | 0.0000004 | |
ஸ்காண்டியம் | 0.0000002 | |
டாண்ட்டலம் | 0.0000002 | |
தோரியம் | 0.0000001 | |
சமாரியம் | 0.000000050 | |
டங்க்ஸ்டன் | 0.000000020 |
மேற்கோள்
தொகு- ↑ Thomas J. Glover, comp., Pocket Ref, 3rd ed. (Littleton: Sequoia, 2003), p. 324 (LCCN 2002091021-), which in turn cites Geigy Scientific Tables, Ciba-Geigy Limited, Basel, Switzerland, 1984.
- ↑ J. Emsley, The Elements, 3rd ed., Oxford: Clarendon Press, 1998.