மனுபென் காந்தி

மனுபென் காந்தி (Manuben Gandhi), மகாத்மா காந்தியின் மகன் வழி பேத்தி ஆவார். இவர் தனது 17 வயதில் மகாத்மா காந்தியின் உதவியாளராக சேவை செய்தார். 30 ஜனவரி 1948-இல் காந்தி இறக்கும் வரை, 1946-ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகள், மிருதுளா காந்தி எனற பெண்மணியுடன் சேர்ந்து, மகாத்மா காந்தியின் உதவியாளராக இருந்து காந்தியைக் கவனித்துக் கொண்டவர். நவகாளிப் படுகொலைகளை நிறுத்த, மகாத்மா காந்தி மேற்கொண்ட நவகாளி யாத்திரையின் போது காந்தியுடன் கொல்கத்தாவில் தங்கி காந்தியை பராமரித்தவர். எனவே இவரை காந்தியின் கைத்தடி மக்கள் அன்பாக அழைப்பர்.

மகாத்மா காந்தி வெளியே செல்லும் போது, தனது கைகளை மனுபென் காந்தி மற்றும் மிருதுளா காந்தியின் தோள்களில் போட்டுக் கொண்டு செல்வது வழக்கம். இவர் காந்தியுடன் இருந்த இரண்டு ஆண்டுகளில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி இறந்த பிறகு, மனுபென் காந்தி, மகாத்மா காந்தியை தனது தாய் எனக்குறிப்பிட்டு ஒரு சிறு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.[1]

இவர் இறந்த நாற்பது ஆண்டுகள் கழித்து, இவரின் 2,000 பக்கங்கள் கொண்ட குஜராத்தி மொழியில் எழுதிய 10 நாட்குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டது. ஒரு முறை மகாத்மா காந்தி தனது பிரம்மச்சாரிய விரதத்தை நிருபிப்பதற்காக, மனுபென்னுடன் படுக்கையில் படுத்த போது, தனக்கு ஏற்பட்ட பாலியல் உணர்வை, மகாத்மாகாந்தி வெளிப்டையாக விளக்கியுள்ளார்.[2]

மகாத்மா காந்தி இறந்த பிறகு மனுபென் காந்தி, குஜராத்தின் பவ நகரில் ஒரு ஒரு சிறார் பள்ளியை நடத்திக் கொண்டு 21 ஆண்டுகள் கழித்தார்.இவர் த‌மது 40-வது வயதில் தில்லியில் மறைந்தார்.


மேற்கோள்கள் தொகு

  1. Babu – My Mother – By Manubhen Gandhi
  2. Mahatma & Manuben

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுபென்_காந்தி&oldid=2938890" இலிருந்து மீள்விக்கப்பட்டது