மன்னம்பிட்டிப் பாலம்

மன்னம்பிட்டிப் பாலம் 302 மீட்டர் நீளமுடைய இலங்கையிலுள்ள இரண்டாவது நீளமான பாலமாகும். இது இரண்டு பாலங்களைக் கொண்டுள்ளது. பழைய பாலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரும்புச் சட்டகத்தினால் கட்டப்பட்டதும், தொடர் வண்டிப் பாதைக்காகப் பாவிக்கப்படுகின்றது. புதியது நெடுஞ்சாலைக்கான இரு பாதைகளைக் கொண்டு காணப்படுகின்றது. இரும்புச் சட்டகப் பாலம் 1922இல் பிரித்தானிய இலங்கையினால் கட்டப்பட்டது.[1] இது 291 மீட்டர் நீளமும் 5 மீட்டருக்கும் குறைவைான அகலத்தையும் கொண்டது.[2] இப்பாலம் ஏ11 நெடுங்சாலையில் அபரணை-திருக்கொண்டியாமடு வீதியில் அமைந்து, வடமத்திய மாகாணத்தை கிழக்கு மாகாணத்துடன் மகாவலி ஆற்றுக்கு மேலாக இணைக்கிறது.[3] இது சப்பானிய பொருளாதார உதவியுடன் அமைக்கப்பட்டு, இலங்கை-சப்பான் நட்புறவு சமாதானப் பாலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.[4] சப்பானிய பன்னாட்டு கூட்டுத்தாபன முகவர் 1.3 பில்லியன் இலங்கை ரூபாய்களை சப்பானிய அரச சார்பாக வழங்கியது. 25 ஒக்டோபர் 2007 இல் திறந்து வைக்கப்பட்ட இப்பாலம் புதிய 50 ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளது.[5]

மன்னம்பிட்டிப் பாலம்
Manampitiya Bridge
பழைய மன்னம்பிட்டிப் இருப்புச் சட்டகப் பாலம்
வாகன வகை/வழிகள்3 பாதைகள் (2 நெடுஞ்காலைப் பாதைகள், 1 இரும்புப் (தொடர் வண்டிப்) பாதை)
கடப்பதுமகாவலி ஆறு
இடம்மன்னம்பிட்டி, பொலன்னறுவை மாவட்டம்
அதிகாரபூர்வ பெயர்இலங்கை-சப்பான் நட்புறவு சமாதானப் பாலம்
Characteristics
வடிவமைப்புபிடிமானப் பாலம்
மொத்த நீளம்302மீ
அகலம்10.4மீ
History
திறக்கப்பட்ட நாள்1922 (பழைய பாலம்)
25 ஒக்டோபர் 2007 (புதிய பாலம்)

மேற்கோள்கள் தொகு

  1. "Japan provides Rs 990m for Manampitiya bridge". Daily News. 2005. Archived from the original on 21 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011.
  2. "Peace bridge over Mahaweli with Japanese funds". Sunday Observer. 2005. Archived from the original on 17 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011.
  3. "New bridge gateway to peace". Ministry of Defense. 2007. Archived from the original on 27 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011.
  4. "Lanka's longest bridge to open on Thursday". Daily News. 2007. Archived from the original on 21 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011.
  5. "2010 - Sri Lanka - 50 Rupee note Development, Prosperity and Sri Lanka Dancers". Lakdiva. 2010. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னம்பிட்டிப்_பாலம்&oldid=3587848" இலிருந்து மீள்விக்கப்பட்டது