மன்மோகன் கோசு
மன்மோகன் கோசு (Manmohun Ghose) (1844 மார்ச் 13 - 1896 அக்டோபர் 16) இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பாரிஸ்டர் ஆவார். [1] [2] பெண்களுக்கு கல்வி வழங்குவதில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வைத் தூண்டியதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய அரசியலில் நாட்டின் ஆரம்ப நபர்களில் ஒருவராகவும் இருந்ததில் இவர் குறிப்பிடத்தக்கவர். அதே நேரத்தில் இவரது ஆங்கிலமயமாக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் இவரை கொல்கத்தாவில் கேலிக்கு ஆளாகின. [3]
மன்மோகன் கோசு | |
---|---|
பிறப்பு | 13 March 1844 பைராகிடி, முன்சிகஞ்ச், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 16 October 1896 கிருட்டிணா நகர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | (அகவை 52)
படித்த கல்வி நிறுவனங்கள் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
பணி | பார் அட் லா, சமூக சீர்திருத்தவாதி, சமூக ஆர்வலர் |
அறியப்படுவது | இந்திய தேசிய காங்கிரசின் இணை நிறுவனர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைத் துணை | சுவர்ணலதா |
உறவினர்கள் | இலால் மோகன் கோசு (சகோதரன்) |
உருவாகிய ஆண்டுகள்
தொகுஇவர் இப்போதைய வங்காளதேசத்தின் முன்சிகஞ்ச் மாவட்டதிலுள்ள பிக்ராம்பூரைச் சேர்ந்த இராம்லோகன் கோசின் மகனாவார். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற துணை நீதிபதியும் மற்றும் ஒரு தேசபக்தரும் ஆவார். மேலும் இராசாராம் மோகன் ராயுடன் தொடர்பு கொள்ளும்போது பரந்த மனநிலையைப் பெற்றார்.
ஒரு குழந்தையாக கோசு தனது தந்தையுடன் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நதியா மாவட்டத்தில் உள்ள கிருட்டிணாநகரில் வசித்து வந்தார். 1859இல் கிருட்டிணா நகர் அரசுக் கல்லூரியில் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1858ஆம் ஆண்டில், 24 பர்கானாக்களில் தாக்கி-சிறிபூரைச் சேர்ந்த சைமா சரண் ராய் என்பவரின் மகளான சுவர்ணலதா என்பவரை மணந்தார்.
இவர் பள்ளியில் படித்தபோது, இண்டிகோ இயக்கம் பொங்கி எழுந்தது. இவர் இண்டிகோ வியாபாரிகளுக்கு எதிராக ஒரு கட்டுரையை எழுதி இந்து பேட்ரியாட் என்ற இதழுக்கு அனுப்பினார். ஆனால் அதன் ஆசிரியர் ஹரிஷ் சந்திர முகர்ஜியின் அகால மரணம் காரணமாக அதை வெளியிட முடியவில்லை. இவர் 1861இல் கொல்கத்தா, மாகாணக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஒரு மாணவராக இருந்தபோது, கேசப் சுந்தர் செனுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து இந்தியன் மிரர் என்ற பத்திரிக்கையைத் தொடங்கினர்.
1862 ஆம் ஆண்டில், இவரும் சத்யேந்திரநாத் தாகூரும் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கும், எழுதுவதற்கும் இங்கிலாந்துக்குச் சென்ற முதல் இரண்டு இந்தியர்களாவர். அந்த நேரத்தில் இந்த தேர்வுகள் உலகில் மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. மேலும், கடல் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்லும் எந்தவொரு திட்டமும் இந்திய சமுதாயத்தின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. [4] இந்தியாவில் கற்பிக்கப்படாத பல பாடங்களை இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததால், தேர்வுக்கான ஏற்பாடுகள் கடினமாக இருந்தன. மேலும், கோசு இன பாகுபாடுகளுக்கும் உட்பட்டார். [3] தேர்வு அட்டவணைகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. இவர் இரண்டு முறை தேர்வெழுதினாலும் வெற்றி பெறத் தவறிவிட்டார். இவரது நண்பர் சத்யேந்திரநாத் தாகூர் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த முதல் இந்தியர் ஆனார்.
இங்கிலாந்தில் இருந்தபோது, அங்கே கடினமான காலத்திலிருந்த சக கொல்கத்தா கவிஞர் மைக்கேல் மதுசூதன் தத்தாவுக்கு இவர் ஆதரவை வழங்கினார். [5]
பாரிஸ்டர் மற்றும் ஆங்கிலமயமாக்கப்பட்ட இந்தியர்
தொகுலிங்கனின் விடுதியில் இருந்து மன்மோகன் கோசு வழக்கறிஞராக பணிபுரிய அழைக்கப்பட்டார். [6] பின்னர், கோசு 1866இல் இந்தியா திரும்பினார். அந்த நேரத்தில் இவரது தந்தை இறந்துவிட்டார். இவர் 1867இல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு பாரிஸ்டராக பயிற்சி செய்யத் தொடங்கினார்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற முதல் இந்திய சட்டத்தரணியாவார். 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற முதல் இந்தியர் ஞானேந்திரமோகன் தாகூர் எனவும் மன்மோகன் கோசு 1866ஆம் ஆண்டில் பயிற்சி பெற்ற இரண்டாவது இந்தியர் என்றும் ஒரு சர்ச்சை இருக்கிறது.
இங்கிலாந்துக்கு நிரந்தரமாக செல்ல முடிவெடுப்படுவதற்கு முன்பு ஞானேந்திரமோகன் தாகூர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒருபோதும் பயிற்சி செய்யவில்லை. எனவே கோசு இந்திய சட்டத்தரணியின் முதல் பயிற்சியாளராக கருதப்படுகிறார். [7] [2] இவரது திறமைகள் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டு, குறுகிய காலத்திற்குள் இவர் ஒரு குற்றவியல் வழக்கறிஞராக தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார். பல சந்தர்ப்பங்களில் இவர் பிரிட்டிசு ஆளும் உயரடுக்கின் தன்மையை அம்பலப்படுத்தினார். மேலும் குற்றவாளிகள் அல்லாதவர்களைப் பாதுகாத்தார். [8]
இங்கிலாந்தில் இருந்து திரும்பி, லோரெட்டோ கான்வென்ட்டில் உள்ள கன்னியாஸ்திரிகளின் பொறுப்பில் தனது மனைவியை அவரது கல்விக்காக நியமித்தார். இவரது மனைவி கல்வியை முடித்த பின்னர்தான் அவர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
இங்கிலாந்தில் இருந்தபோது, கோசு பெங்காலி பிரதான உணவான, மீன் கறி மற்றும் அரிசி ஆகியவற்றிற்காக ஏங்கினார். ஆனால் வீட்டிற்குத் திரும்பிய இவர் குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பை மீறி ஒரு ஆங்கிலமயமாக்கப்பட்ட இந்தியரின் அனைத்து பண்புகளையும் எடுத்துக் கொண்டார். பிற்காலத்தில், உள்ளூர் பத்திரிகைகள் மறுக்கப்பட்ட இந்தியரை விமர்சிக்க முயன்ற போதெல்லாம், கோசு எப்போதுமே ஏளனத்தின் முதன்மை இலக்காக மாறினார். இவர் தாகூர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தபோதிலும், இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்துவதில் தலைவர்களாக இருந்தபோதும், அவர்களின் கதவுகளை உலகுக்குத் திறந்து வைத்திருந்தாலும், சத்யேந்திரநாத் தாகூரின் தனிப்பட்ட நண்பராக இருந்தபோதும், இவர் மேற்கத்தியமயமாக்கலில் சாய்ந்தார். சத்யேந்திரந்த் தாகூரின் மனைவி ஞானதானந்தினி தேவி, பாரம்பரிய இந்திய புடவையை அணிந்தபோது, கோசின் மனைவி சுவர்ணலதா, ஆங்கிலப் பெண்களின் பாணியில் கவுன் அணியத் தொடங்கினார். [9]
பெண்களுக்கான கல்வித்துறையில் பங்களிப்பு
தொகுகிருட்டிணாநகர் கல்லூரிப் பள்ளியைக் கட்டியெழுப்புவதற்காக தனது வீட்டை நன்கொடையாக வழங்கியதைத் தவிர, குறிப்பாக பெண்கள் கல்வித்துறையில், தனது நாட்டு மக்களின் நிலையை மேம்படுத்துவதில் கோசு ஆற்றிய பங்களிப்புகளுக்காக நீண்டகாலமாக நினைவுகூரப்படுவார்.
1862-1866ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது யூனிடேரியன் சீர்திருத்தவாதியான மேரி கார்பெண்டருடன் இவர் நட்பு கொண்டிருந்தார். 1869ஆம் ஆண்டில் மகளிர் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்துடன் அவர் கொல்கத்தாவுக்குச் சென்றபோது, கோசு மேரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். கேசப் சுந்தர் சென் தலைமையிலான இந்திய சீர்திருத்த சங்கத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒரு சாதாரண பள்ளியை அமைப்பதில் மேரி வெற்றி பெற்றார். [10]
இங்கிலாந்தில் தங்கியிருந்தபோது, அவர் மற்றொரு யூனிடேரியன் அன்னெட் அக்ராய்டுடன் நட்பு கொண்டிருந்தார். மகளிர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கொல்கத்தா வந்ததும், அக்டோபர் 1872 இல், அவர் கோசின் வீட்டில் விருந்தினராக இருந்தார். கோசின் மனைவி சுவர்ணலதா, அன்னெட் அக்ராய்டைக் கவர்ந்தபோது, கேசப் சுந்தர் செனின் "விடுவிக்கப்படாத இந்து மனைவியை" சந்தித்தபோது அன்னெட் "அதிர்ச்சியடைந்தார்". [10]
அன்னெட் அக்ராய்ட்டின் திருமணத்திற்குப் பிறகு, இவர் இந்து மகிலா வித்யாலயா மற்றும் மறுமலர்ச்சிக்கான பங்கா மகிலா வித்யாலயா பள்ளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். [10] இறுதியாக, பெதுன் பள்ளியுடன் பங்கா மகிலா வித்யாலயாவை இணைப்பதில் இவர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார். [11] மன்மோகன் கோசு இறக்கும் போது, நிறுவனம் ஏற்கனவே இவரது செயலாளரின் கீழ், பெண்கள் முதுகலை படிப்பு வரை படிக்கக்கூடிய உயர் படிப்புகளின் மையமாக மாறியது. [12]
அரசியல்
தொகு1876இல் இந்திய சங்கம் நிறுவப்பட்டபோது இவர் அதன் ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். சுரேந்திரநாத் பானர்ஜி, ஆனந்த மோகன் போசு மற்றும் பிறருடன் ஏராளமான சந்திப்புகள் இவரது வீட்டில் நடைபெற்றன. இவர் 1885இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். மேலும் 1890இல் கொல்கத்தாவில் நடைபெற்ற அதன் அமர்வின் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தார். நீதித்துறையை நிர்வாகத்திலிருந்து பிரிக்க கடுமையாக போராடிய இவர், இந்தியாவில் நீதி நிர்வாகம் என்ற புத்தகத்தை எழுதினார். [13] இவர் குழந்தைத் திருமண நடைமுறைக்கு எதிராக போராடினார். மேலும் திருமணத்தில் ஒப்புதல் தேவைப்படும் 1891 மசோதாவையும் ஆதரித்தார். [14]
1869 முதல், இவர் நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வுகளைத் தூண்டி பல்வேறு இடங்களில் உரைகளை நிகழ்த்தினார். 1885ஆம் ஆண்டில், இவர் இங்கிலாந்து சென்று பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார்.
பூங்கா தெருவில் உள்ள சத்யேந்திரநாத் தாகூரின் வீடு (ஓய்வு பெற்ற பிறகு) கொல்கத்தாவில் வயது வந்தவர்களுக்கான சந்திப்பு இடமாக இருந்தது. கோசு தாரக்நாத் பாலித், சத்யேந்திர பிரசன்னோ சின்கா, உமேஷ் பானர்ஜி, கிருஷ்ணா கோவிந்த குப்தா, மற்றும் பிகாரி லால் குப்தா ஆகியோருடன் வழக்கமான பார்வையாளராக சேர்ந்தார். [9]
குறிப்புகள்
தொகு- ↑ Subodhchandra Sengupta (1998). Sansad Bangali charitabhidhan. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85626-65-9.
- ↑ 2.0 2.1 Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, pp. 639-40, General Printers and Publishers Pvt. Ltd.
- ↑ 3.0 3.1 David Kopf (1979). The Brahmo Samaj and the Shaping of the Modern Indian Mind. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-03125-5.
- ↑ Dutt, R.C., Romesh Chunder Dutt, 1968/1991, p. 12, Publications Division, Government of India.
- ↑ Subodhchandra Sengupta (1998). Sansad Bangali charitabhidhan. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85626-65-9.
- ↑ Mohanta, Sambaru Chandra (2012). "Ghosh, Manmohan". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Subodhchandra Sengupta (1998). Sansad Bangali charitabhidhan.
- ↑ Subodhchandra Sengupta (1998). Sansad Bangali charitabhidhan. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85626-65-9.
- ↑ 9.0 9.1 Banerjee, Hiranmay, Thakurbarir Katha, (in வங்காள மொழி), p. 137, Sishu Sahitya Sansad.
- ↑ 10.0 10.1 10.2 Kopf, David, pp. 34-35
- ↑ Bagal, Jogesh Chandra, History of the Bethune School and College (1849–1949) in Bethune College and School Centenary Volume, edited by Dr. Kalidas Nag, 1949, pp. 33-35
- ↑ Bagal, Jogesh Chandra, p. 53
- ↑ Subodhchandra Sengupta (1998). Sansad Bangali charitabhidhan. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85626-65-9.
- ↑ Mohanta (2012). Banglapedia: National Encyclopedia of Bangladesh.