மரபணு சாராப் பகுதி

மரபணு சாராப் பகுதிகள் என்பது நிலைகருவுள்ள உயிர்களில் (Eukaryote) முந்திய ஆர்.என்.ஏ க்களில் (precursor RNA) உள்ள ஒரு வரிசையாகும். இவைகள் ஆர்.என்.ஏ முதிர்வாக்கம் அல்லது ஆர்.என்.ஏ பிளவிணைதல் என்னும் நிகழ்வு மூலம் அகற்றப்பட்டு மரபணு பகுதிகள் இணைக்கப்படும். நிலைக்கருவிலி உயிர்களில் (prokaryote) இவைகள் காணப்படுவதில்லை. முதலில் மரபணு சாராப் பகுதிகளை குப்பைகள் (junk) என கருதப்பட்டது. பின்னர் வளர்சிதை மாற்றங்களில் (developmental regulation) இன்றியமையாத பணிகளை புரியும் குறு ஆர்.என்.ஏ க்கள் இப்பகுதிகளில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது என அறியப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணு_சாராப்_பகுதி&oldid=2742773" இலிருந்து மீள்விக்கப்பட்டது