மரியா மனாகோவா

செர்பிய சதுரங்க வீராங்கனை

மரியா மனாகோவா (Maria Manakova) என்பவர் உருசியாவின் கசான் நகரில் பிறந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார்[1]. இவர் 1974 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார். செர்பிய நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மரியா யுகோசுலேவியா பெண்கள் சதுரங்க அணிக்காக விளையாடி வருகிறார். 1999 ஆம் ஆண்டு பத்தூமி நகரில் நடைபெற்ற பெண்கள் ஐரோப்பிய அணி சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் யுகோசுலேவிய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது[2]. மரியா எந்த ஆட்டத்திலும் விளையாடாமல் அணியில் மாற்று ஆட்டக்காரராகவே இருந்தார். அடுத்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் போட்டியிட்ட மரியா இரண்டாவது சுற்று வரை முன்னேறினார். 2013 ஆம் ஆண்டு செர்பிய பெண்கள் சாம்பியன் பட்டத்தை மரியா வென்றார்[3].

மரியா மனாகோவா, வார்சா 2013

இவருடைய அதிகபட்ச எலோ தரப்புள்ளிகள் 2395 ஆகும். ஏப்ரல் 2001 இல் இந்த புள்ளிகளை அவர் எடுத்திருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Smart move or a cheap trick? This grandmaster wants chess to be sexy". The Telegraph. 2004-08-08. பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.
  2. Bartelski, Wojciech. "European Women's Team Chess Championship: Maria Manakova". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  3. "Maria Manakova wins Serbian Women Chess Championship". Chessdom. 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 10 February 2016.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_மனாகோவா&oldid=3862779" இலிருந்து மீள்விக்கப்பட்டது