மருதன் (எழுத்தாளர்)
மருதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய மருதன் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம், சே குவேரா: வேண்டும் விடுதலை, ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்! ஆகியவை அவற்றுள் புகழ் பெற்றவை.
கல்கி, நக்கீரன், ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த மருதன், 2006ம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பக்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- துப்பாக்கி மொழி (இந்தியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வு.)
- திபெத்: அசுரப்பிடியில் அழகுக் கொடி
- பிடல் காஸ்டிரோ: சிம்ம சொப்பனம்
- ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்!
- சர்வம் ஸ்டாலின் மயம்
- மும்பை: குற்றத் தலைநகரம்
- நேதாஜி: மர்மங்களின் பரமபிதா
- சே குவேரா: வேண்டும் விடுதலை!
- லெனின்: முதல் காம்ரேட்!
- திப்பு சுல்தான் - முதல் விடுதலைப் புலி
- விடுதலைப் புலிகள்
வெளியாகும் தொடர்கள்
தொகு- வெற்றி மீது வெற்றி வர! (நக்கீரன் வாரமிருமுறை இதழ்)
- என் பெயர் தென்றல் (கோகுலம் சிறுவர் மாத இதழ்)