வெண் மருது
தாவர இனம்
(மருதம் (மரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெண் மருது | |
---|---|
மருதப் பழம் | |
Arjuna flowers with a Sykes's Warbler | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. arjuna
|
இருசொற் பெயரீடு | |
Terminalia arjuna (Roxb.) Wight & Arn. |
வெண் மருது (Terminalia arjuna) என்பது ஒருவகை மரமாகும். இது குறிகளான நீள்சதுர இலைகளையும் சாம்பல் நிற வழுவழுப்பான பட்டைகளையும் உடைய ஓங்கி வளரும் பெரிய இலையுதிர் மரம். இதன் பட்டை சதைப்பற்றாக இருக்கும். தமிழக ஆற்றங்கரைகளில் தானாகவே வளர்கிறது. இதில் கருமருது, கலிமருது, பூ மருது என பல்வேறு இனங்கள் உள்ளன. இதன் இலை, பழம், விதை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.திருவிடைமருதூர், திருஇடையாறு ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. தமிழில் இது "நீர் மருது அல்லது மருத மரம் அல்லது வெண் மருது" ("நீர் மருது (அ) மருத மரம் (அ) வெண் மருது") என அறியப்படுகிறது.[1][2]
மேற்கோள்
தொகு- ↑ http://www.shaivam.org/sv/sv_marudham.htm
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.45