மரையிடப்பட்ட தெறாடி

ஒரு மரையிடப்பட்ட தெறாடி அல்லது மரையிடப்பட்ட-தெறாடி என்பது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் செய்யப்பட்ட ஒரு வகை வேட்டெஃகம். முதலில் இந்த சொல் ஒரு சீர்குழல் ஆயுதமாக விளைவிக்கப்பட்ட தெறாடிகளுக்கு மட்டுமே குறிப்பிடப்படுகிறது, பின்னர் அவற்றின் சுடுகுழல்கள் மரையிடப்பட்ட சுடுகுழல்களால் மாற்றப்பட்டன. இந்தச் சொல்லானது பின்னர் நேரடியாக மாற்றப்பட்ட துமுக்கிகளையும் ஒரு குறிப்பிட்ட மாதிரி சீர்குழல் தெறாடியின் ஒட்டுமொத்தமாக அதே வடிவமைப்பில் இருந்தவற்றையும் குறிக்க பயன்பட்டது.

ஸ்பிரிங்ஃவீல்ட் மாதிரி 1861 மரையிடப்பட்ட தெறாடி
தோரணி 1853 என்ஃவீல்ட் மரையிடப்பட்ட தெறாடி

வரலாறு மற்றும் வளர்ச்சி தொகு

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், துமுக்கிகளும் தெறாடிகளும் இருந்தன. தெறாடிகள் சீர்குழல் முகவாய்-தாணித்தல் ஆயுதங்கள் ஆகும். அவை வட்ட ஈயக் குண்டுகள் அல்லது கலை மற்றும் குண்டு போன்ற கணைகளை சுடுகின்றன. இவை ஒரு சுரிகையினை பூணும் விதமாயும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான அனற்கலள் அல்லது மூடியள் சூட்டு பொறிமுறையைப் பயன்படுத்தியதில் துமுக்கிகள் ஒத்திருந்தன, ஆனால் முக்கிய வேறுபாடு என்னவென்றால், அவற்றின் சுடுகுழல்கள் மரையிடப்பட்டிருந்தன - அதாவது, அவற்றின் சுடுகுழல்களில் உட்புற மேற்பரப்பில் பொளிவாய்கள் வெட்டப்பட்டிருந்தன, இதனால் சன்னம் சுடுகுழலில் இருந்து வெளியேறும்போது சுழலும்.

 
பல்வேறு மரையிடப்பட்ட தெறாடி எறிபொருள்கள்

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

 


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரையிடப்பட்ட_தெறாடி&oldid=3294545" இலிருந்து மீள்விக்கப்பட்டது