மறைந்து தாக்கும் விமானம்

மறையும் தொழில்நுட்பம் என்பது ஒரு விமானத்தை கதிரலைக் கும்பா கருவி கண்டுபிடிக்காவண்ணம் விமானத்தை வடிவமைப்பதாகும். அவ்வாறு வடிவமைக்கப்பட்ட விமானத்தில் நுண்ணலை எதிரொளிப்பு மற்றும் உமிழ்வும் குறைவாக இருக்கும். இந்தத் தொழில் நுட்பம் எந்தஎந்த விமானங்களை வடிவமைத்து உள்ளனவோ அவை மறைந்து இயங்கும் விமானம் என்று அழைக்கப்படும். இப்படிப்பட்ட விமானம் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எதிரி ரேடர் உள்ள இடங்களில் வட்டமடித்துத் திரியும். இந்தத் தொழில் நுட்பத்தின் அடிப்படை காரணிகள் பின்வருமாறு கூறப்படுகிறது.

  1. செயலற்ற முறையிலோ அல்லது செயலார்ந்த முறையிலோ ரேடர் குறுக்கு வெட்டை ( radar rcs ) குறைதல்.
  2. விமானத்தின் வடிவம் நுண்ணலை குறைந்த அளவில் சிதறடிகவோ அல்லது வேறு திசையில் எதிரொளிக்கும் முறையிலோ இருத்தல்.
  3. செங்கோண வடிவங்களைத் தவிர்த்தல் போன்றவை. இந்த செங்கோணங்கள் நுண்ணலை எதிரொளித்தலை அதிகப்படுத்தும்.
  4. கார்பன் இழை வலுவூட்டப்பட்ட பல்பகுதியம் (Carbon-fiber-reinforced polymer) போன்ற செயற்கைப் பொருள்கள் கொண்டு விமானத்தின் இறக்கைகளை வடிவமைத்தல்.
  5. மேலும் புகை போகியை விமானத்தின் மையப்பகுதியின் மேற்புறமாக வைத்தல். இதனால் வெப்ப அலைகளின் வெளியேற்றம் குறைவாக இருக்கும். போர் ஆயுதங்கள் மற்றும் எதிரிகளின் கருவிகளைச் செயலிழக்கச் செய்யும் எதிர்த் தாக்கு ( மின்னணு போர்) கருவிகளையும் விமானத்தினுள் வைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும். இதன் காரணத்தால் இக் கருவிகளால் ஏற்படும் நுண்ணலை எதிரொளிப்பு குறைகிறது.
An F-117 நெய்யிட் ஹல்க் மறைந்து தாக்கும் விமானம்

ரேடர் குறுக்கு வெட்டு குறைவதனால் விமானத்தின் 30 dB அளவு எதிரொளிப்பு குறைகிறது. இதனால் சாதாரண விமானத்தை கொண்டுபிடிபதை விட ரேடரால் 18 சதவீதத்திற்கும் குறைவாகவே கண்டுபிடிக்கமுடியும். அதே சமயம் இந்த விமானங்கள் அதிக விலைமதிப்புடையவை.

மேற்குறிப்பு

தொகு
  • David K. Barton, Sergey A. Leonov, Radar Technology Encyclopedia, Artech House, Boston, London, 1997