மலபார் பிரதேசம்

மலபார் பிரதேசம் (Malabar region) தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் அரபுக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் மலபார் பிரதேசம் அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தின் கடற்கரை பிரதேசங்களும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டம், வட கன்னட மாவட்டம், துளு நாடு மற்றும் குடகு மாவட்டப் பகுதிகளும் மலபார் பிரதேசத்தில் அடங்கும்.

மலபார்
பிரதேசம் Region
கடலூர் கலங்கரை விளக்கம், கோயிலாண்டி அருகில், கோழிக்கோடு
கடலூர் கலங்கரை விளக்கம், கோயிலாண்டி அருகில், கோழிக்கோடு
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
 • அடர்த்தி816/km2 (2,110/sq mi)
Languages
 • அலுவல் மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL-01 to KL-71
மாவட்டங்கள்14
தட்பவெப்பம்மித வெப்ப மண்டலம் (கோப்பென் காலநிலை)
பிலாத்தூரில் ஓணம் பண்டிகை
மலபாரில் சமுதாய நிகழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் அரபுக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் மலபார் பிரதேசம் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்

தொகு

மல-பாரம் என்ற மலையாள மொழிச் சொல்லிருந்து மலபார் என்ற பெயர் தோன்றியது. மலையாளத்தில் மல என்பதற்கு மலை என்றும், பாரம் என்பதற்கு வாரம் (மலையடி வாரம்) என்று பொருளாகும்.[சான்று தேவை]

வரலாறு

தொகு

இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைப் பிரதேசத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருக்கும், அரபுக் கடலுக்கும் இடைப்பட்ட கர்நாடகா மற்றும் கேரளா மாநில நிலப்பகுதிகளே மலபார் பிரதேசம் ஆகும். மலபார் பிரதேசம் வடக்கே கோவா முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் நீண்டுள்ளது. பண்டைய காலத்தில் மலபார் என்ற சொல் தென்மேற்குக் கடற்கரைப் பிரதேசங்களை குறிக்கப் பயன்பட்டது.

மலபார் பிரதேசத்தின் பகுதிகளை சேரர்கள் கிபி 12-ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பின்னர் துளு நாடு திருவிதாங்கூர் இராச்சியம், கொச்சி இராச்சியம் மற்றும் குடகு இராச்சியத்தினர் ஆண்டனர்.

புவியியல்

தொகு

கோவா முதல் கன்னியாகுமரி மாவட்டம் முடிய மலபார் கடற்கரை 845 கிமீ (525 மைல்) நீளம் கொண்டது. இதன் மேற்கே அரபுக் கடல், கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் கொண்டது. மலபார் பிரதேசம் தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பொழிகிறது.

துறைமுக நகரங்கள்

தொகு

மலபார் பிரதேசம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரங்களுக்கு பெயர் பெற்றது. அவைகளில் புகழ்பெற்றது புது மங்களூர் துறைமுகம், கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் மற்றும் விழிஞ்சம் ஆகும். முன்னர் மலபார் பகுதியில் யூதர்கள் இருந்தனர். தற்போது இந்துக்களுடன் மாப்பிளா சிரியாக் கிறித்துவர்கள் மற்றும் இசுலாமியர்கள் வாழ்கின்றனர்.[1]

மலபார் மாவட்டம்

தொகு
 
31 அக்டோபர் 1956 முடிய இருந்த சென்னை மாகாணத்தில் மலபார் மாவட்டப் பகுதிகள்

பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக மலபார் மாவட்டம் விளங்கியது. இம்மாவட்டம் தற்கால வடக்கு கேரளா பகுதிகளையும், கர்நாடகாவின் மங்களூர், உடுப்பி மாவட்டம், வட கன்னட மாவட்டம் உள்ளிட்ட கடற்கரை பிரதேசங்களையும் கொண்டது. மலபார் மாவட்டத்தின் தலைமையிடமாக கோழிக்கோடு விளங்கியது. மிளகு வேளாண்மைக்கு மலபார் மாவட்டம் புகழ்பெற்றது.[2] மலபார் மாவட்டத்தை வடக்கு மலபார் என்றும், தெற்கு மலபார் என்றும் இரண்டாகப் பிரிப்பர். வடக்கு மலபார் பகுதி தற்கால காசர்கோடு மாவட்டம், கண்ணூர் மாவட்டம் வயநாடு மாவட்டத்தின் மன்னந்தாவடி வட்டம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் வட்டக்கரை மற்றும் கோயிலாண்டி வட்டங்களைக் கொண்டது. தெற்கு மலபார் பகுதியில் பாலக்காடு மாவட்டம், திருசூர் மாவட்டத்தின் சவக்காடு வட்டம் மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் எரநாடு வட்டங்களும் கொண்டது.

நவீன வரலாறு

தொகு

ஆங்கிலேய-மைசூர்ப் போர்களுக்குப் பின்னர் மலபார் பிரதேசம் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டம் என்ற பெயரில் இயங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் போது, மலபார் பிரதேசத்தின் மலபார் மாவட்டத்தை கேரளா மாநிலத்துடனும் மற்றும் வடகன்னட மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டம் ஆகியவைகளை கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala. Encyclopædia Britannica". Encyclopædia Britannica Online. 8 June 2008.
  2. Pamela Nightingale, ‘Jonathan Duncan (bap. 1756, d. 1811)’, Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004; online edn, May 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_பிரதேசம்&oldid=3945486" இலிருந்து மீள்விக்கப்பட்டது