மலபார் வானம்பாடி

மலபார் வானம்பாடி
கேலேரிடா மலபாரிகா, இந்தியாவின் மகராட்டிரம் மேன்கானில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கெ. மலபாரிகா
இருசொற் பெயரீடு
கெலெரிடா மலபாரிகா
(சோகோபோலி, 1786)
வேறு பெயர்கள்
  • அலாவுடா மலபாரிகா

மலபார் வானம்பாடி (Malabar lark) அல்லது மலபார் கொண்டை வானம்பாடி (கெலெரிடா மலபாரிகா) என்ற சிற்றினம் ஆலுடிடே வானம்பாடி குடும்ப பறவையாகும். இது மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்

தொகு

முதலில், மலபார் வானம்பாடி தற்போதைய பேரினத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு அலாடா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. சிலர் தெக்லா வானம்பாடியினை இதன் துணைச்சிற்றினமாக கருதினர்.[2]

விளக்கம்

தொகு
 

இது ஒரு சிறிய வகை வானம்பாடி ஆகும். இது நீண்ட கூர்முனை விறைப்பு முகடு கொண்டது. இது நெல்குருவியினை விட சாம்பல் நிறமானது. மேலும் இந்த சிற்றினத்தில் வெள்ளை இறக்கை மற்றும் வால் விளிம்புகள் இல்லை.

இது வட இந்தியாவில் இனப்பெருக்கம் செய்யும் கொண்டை வானம்பாடி போன்றது. மலபார் வானம்பாடி சிறியதாகவும், இருண்ட கோடுகள் கொண்ட சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இறகுகள் இருக்கும். அதேசமயம் கொண்டை வானம்பாடி சாம்பல் நிறமாக இருக்கும். வயிறு வெள்ளை நிறத்திலானது. பாலினங்கள் ஒத்தவை.

சைக்சின் வானம்பாடி மற்றொரு இந்திய உறவினராகும். இது சிவப்பு-பழுப்பு நிற இறகுகளைக் கொண்டுள்ளது. ஆனால் சிறியது. கடினமான நிமிர்ந்த முகடு மற்றும் வெற்று பழுப்பு கீழ்ப்பகுதிகளைக் கொண்டுள்ளது.

பரம்பல்

தொகு

மலபார் வானம்பாடி மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது. இது திறந்தவெளி, சாகுபடி மற்றும் புதர்க்காடுகளில் பெரும்பாலும் காணப்படும் பொதுவான பறவை.

நடத்தை மற்றும் சூழலியல்

தொகு

மலபார் வானம்பாடி இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். தரையில் கூடு கட்டி அமர்ந்து இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். இதன் உணவு விதை மற்றும் பூச்சி. பூச்சியினை குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் உண்ணுகின்றது.

 
இந்தியாவின் கேரளாவில் உள்ள கண்ணூரில்

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Galerida malabarica". IUCN Red List of Threatened Species 2017: e.T22717391A111112359. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22717391A111112359.en. https://www.iucnredlist.org/species/22717391/111112359. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Galerida theklae - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_வானம்பாடி&oldid=3791367" இலிருந்து மீள்விக்கப்பட்டது