மலேசியா கலையுலகம் விருதுகள்

மலேசியா கலையுலகம் விருதுகள் (Malaysia Kalai Ulagam Award, MUK Award) என்பது 2015 ஆம் ஆண்டு முதல் மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறையினருக்கு வழங்கப்படும் விருதாகும்.[1] இவ்வாறு விருதுக்குரிய திரைப்படங்கள், நபர்களை தேர்ந்தெடுக்க நடுவர் குழு அமைக்கப்பட்டு சிறந்த பிரபலம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் போன்ற பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றது.[2]

மலேசியா கலையுலகம் விருதுகள்
விளக்கம்தமிழ்த் திரைப்படத்துறையில் மலேசிய இந்தியர்களின் பங்களிப்பு
நாடுமலேசியா
வழங்குபவர்மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறை
முதலில் வழங்கப்பட்டது2015
இணையதளம்https://www.youtube.com/channel/UC_DvlbY3bbyAy9J27EjerwQ
Television/radio coverage
நெட்வொர்க்யூடியூப்

இந்த விருதுகள் திரைப்படம், தொலைக்காட்சி நாடகங்கள், குறும்படங்கள் மற்றும் குறுந்தட்டு படங்கள் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. இவற்றோடு வாழ்நாள் சாதனையாளர் விருது, மக்கள் மத்தியில் பிரபலமான கலைஞர் ஆகிய இருவிருதுகளும் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.thaimoli.com/news-detail.php?nwsId=12172[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.