மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022
மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022 அல்லது செரட்டன் நகர்வு (மலாய்: Kemelut Politik Malaysia 2020–2022 அல்லது Langkah Sheraton; ஆங்கிலம்: 2020–2022 Malaysian Political Crisis அல்லது Sheraton Move என்பது 2020-ஆம் ஆண்டில் இருந்து 2022-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் ஏற்பட்ட ஓர் அரசியல் நெருக்கடியைக் குறிப்பிடுவதாகும்.
![]() | |
நாள் | 22 பெப்ரவரி 2020 – 24 நவம்பர் 2022 |
---|---|
அமைவிடம் | மலேசியா |
பிற பெயர்கள் | செரட்டன் நகர்வு (ஆங்கிலம்: Sheraton Move; மலாய்: Langkah Sheraton) |
காரணம் |
|
பங்கேற்றோர் | |
விளைவு | மலேசியாவின் வரலாற்றில் அடுத்தடுத்து 2 அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்து; ஒரு திடீர் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அன்வார் இப்ராகிம் அமைச்சரவையின் கீழ் முதல் ஒற்றுமை அரசாங்கம் உருவானது,
|
மலேசியாவின் 14-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Members of the Dewan Rakyat, 14th Malaysian Parliament) தங்களின் கட்சி ஆதரவுகளை மாற்றியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. இதுவே மலேசிய நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணியின் பெரும்பான்மையை இழக்க வழிவகுத்தது; அடுத்தடுத்து இரண்டு கூட்டணி அரசாங்கங்கள் சரிவதற்கும் வழி அமைத்தது.
இந்த 18 மாத நெருக்கடியில், மலேசியப் பிரதமர்கள் இருவர் பதவி துறப்புகள் செய்தனர். அத்துடன் 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தலும் (Snap General Election) நடைபெற்றது. இறுதியில் மலேசியாவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (National Unity Government) உருவாக்குவதற்கும் இந்த நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது.
பொது தொகு
பொதுவாக மலேசியாவில், செரட்டன் மூவ் (Sheraton Move) என்று அழைக்கப்படும் இந்த அரசியல் நெருக்கடி, ஆளும் பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியையும்; 22 மாத ஆட்சிக்குப் பிறகு மகாதீர் பின் முகமது பதவி துறப்பு செய்ததையும் கண்டது. இதற்குப் பின்னர் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் அரசியல் நிலைப்பாட்டில் உறுதியற்றத் தன்மை நிலவி வந்தது. அத்துடன் கோவிட்-19 தொற்றுநோய் (COVID-19 Pandemic) தாக்கத்தால் நிலைமை மேலும் மோசம் அடைந்தது.
முகிதீன் யாசின் அமைச்சரவை தொகு
முகிதீன் யாசின் ஆட்சி 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு ஆகத்து 2021-இல் முகிதீன் யாசின் மற்றும் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) பதவி துறப்பு செய்ததன் மூலம் நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்தது.
சில நாட்களுக்குப் பிறகு, முகிதீன் யாசினுக்கு பதிலாக இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் சில மாநிலத் தேர்தல்களும்; 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தலும் முன்கூட்டியே நடைபெற்றன.
மகாதீர் பின் முகமது மறுப்பு தொகு
ஆளும் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஏற்பட்ட பிளவுகளினால் நெருக்கடி தொடங்கியது. பிரதமர் மகாதீர் பின் முகமது ஏற்கனவே நியமிக்கப்பட்ட தன் வாரிசு அன்வர் இப்ராகீமிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் செயல்முறையை முறியடிக்க முயற்சித்ததால் இந்த நெருக்கடி தொடங்கியதாகவும் அறியப் படுகிறது.
மகாதீர் பின் முகமதுவின் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வெற்றிக்கு முன்னதாகவே; அதிகாரத்தை அன்வர் இப்ராகீமிடம் ஒப்படைப்பது என (Handing Power to Anwar Ibrahim) உறுதியளிக்கப்பட்டு இருந்தது. மகாதீர் பின் முகமதுவும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார்.[6]
மக்கள் நீதிக் கட்சி அசுமின் அலி தொகு
2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் புதிய ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கத் தொடங்கினர். தங்களுக்குப் பெரும்பான்மை இடங்கள் இருப்பதாகவும், மலேசிய நாடாளுமன்றத்தின், டேவான் ராக்யாட் (Dewan Rakyat) ஆதரவு தங்களிடம் இருப்பதாகவும் கூறினர். பொதுவாக அவர்கள் மலேசியாவில் புதிய பொதுத் தேர்தலைத் தவிர்க்க முயற்சிகள் செய்தனர்.
முதலில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (Parti Pribumi Bersatu Malaysia) (BERSATU) வெளியேறியது. அதன் பின்னர் மக்கள் நீதிக் கட்சியின் (Parti Keadilan Rakyat) (PKR) துணைத் தலைவர் அஸ்மின் அலியின் (Azmin Ali) தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து வெளியேறினர். இவற்றைத் தொடர்ந்து மகாதீர் பின் முகமது தன் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார். இதன் விளைவாக மலேசிய அரசியலில் ஓர் அதிகார வெற்றிடம் உருவானது.
எட்டாவது பிரதமராக முகிதீன் யாசின் தொகு
மலேசியாவின் மாமன்னர், யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) சுல்தான் அப்துல்லா (Abdullah of Pahang), பின்னர் மலேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள்; மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்து எடுப்பதில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களைச் சந்தித்தார்.
இறுதியில் எட்டாவது பிரதமராக பெர்சத்துவின் (BERSATU) தலைவரான முகைதின் யாசினை மலேசியாவின் மாமன்னர் நியமித்தார். அதன் பின்னர் முகிதீன் யாசின் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார். அதற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம் (Coalition Government of Perikatan Nasional) என்று பெயர் வைக்கப்பட்டது.
நான்கு மாநிலங்களில் இடைத்தேர்தல் தொகு
இதைத் தொடர்ந்து ஜொகூர், மலாக்கா, பேராக், கெடா ஆகிய நான்கு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் பெரும்பான்மையைப் பெற்றதால் அந்த நான்கு மாநில அரசாங்கங்களிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன.
இதன் பின்னர் சபா மாநில சட்டமன்றம் (Sabah State Legislative Assembly) கலைக்கப்பட்டது. சபா மாநிலத் தேர்தல் நடைபெற்றது. பெரிக்காத்தான் நேசனல் வெற்றி பெற்றது. பாரிசான் நேசனல் மற்றும் ஐக்கிய சபா கட்சி (United Sabah Party) ஆகிய கூட்டணிகளுடன் இணைந்து; பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைத்தது.
மலேசிய அவசரகாலம் 2021 தொகு
2020-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், மலேசியாவில் அரசியல் நிலையின்மை (Political Instability) தொடர்ந்து நீடித்தது. 2020 செப்டம்பர் மாதம், அப்போதைய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு செயல்பாட்டில் நிறைவேறவில்லை.[7]
2021 சனவரியில் மலேசியா அவசரகால நிலையை (2021 Malaysian State of Emergency) அறிவித்தது. மலேசியாவில் மோசம் அடைந்து வந்த கோவிட்-19 பெருந்தொற்று (COVID-19 Pandemic in Malaysia), 2021-ஆம் ஆண்டின் மத்தியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை மேலும் சீர்குலைத்தது.[8][9]
அரசியல் நெருக்கடியின் முக்கியமான நபர்கள் தொகு
மலேசிய நாடாளுமன்றம் இடைநிறுத்தம் தொகு
மலேசியாவின் 2021-ஆம் ஆண்டு அவசரகால நிலையின் போது மலேசிய நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. நீண்ட இடைநிறுத்தத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் தற்காலிகமாக மீண்டும் கூடியது. ஆனாலும் அவசரகால நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டன.[10] மேலும் மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கோவிட்-19 பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இதன் விளைவாக நாடளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டன.[11]
மலேசிய அவசரகால அறிவிப்பு 2021, முடிவுக்கு வந்ததும்; எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய பல முறை முயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர்.[12][13]
முகிதீன் யாசின் பதவி துறப்பு தொகு
பெரும்பான்மை ஆதரவை இழந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம், அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் பொதுவான நல்ல ஒரு முடிவைக் காண முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) 16 ஆகத்து 2021-இல் பதவி துறப்பு செய்தது.[14]
இசுமாயில் சப்ரி யாகோப் அமைச்சரவை தொகு
நான்கு நாட்களுக்குப் பிறகு, 2021 ஆகத்து 20-ஆம் தேதி, தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு எனும் அம்னோவின் (UMNO) துணைத் தலைவர் இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob); மலேசியாவின் மாமன்னர், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் பிரதமராக நியமிக்கப்பட்டார். அந்தக் கட்டத்தில் இசுமாயில் சப்ரி யாகோப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று இருந்தார்.[15][16]
இஸ்மாயில் சப்ரியின் அரசாங்கம் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding) கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அப்போதைக்கு ஒரு வலுவான அரசியல் உறுதிபாட்டிற்கான (Political Stability) முயற்சியாகும்.
அன்வர் இப்ராகீம் அமைச்சரவை தொகு
2021 - 2022-ஆம் ஆண்டுகளில், மலேசிய மாநிலச் சட்டமன்றங்களில் உறுதியற்ற தன்மை தொடர்ந்தால் போல நிலவி வந்தது. அதுவே மலாக்காவில் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும்; மற்றும் ஜொகூரில் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் வழிவகுத்தது.
இந்த நெருக்கடியானது 2022-இல் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதனால் ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஒரு தொங்கு நாடாளுமன்றம் உருவானது. ஓர் ஒற்றுமை அரசாங்கம் (National Unity Government) உருவாகுவதற்கும் அந்த அரசியல் நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது. இறுதியில் அன்வர் இப்ராகீம் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ Reme Ahmad (25 February 2020). "What is the PH infighting about?". The Straits Times. https://www.straitstimes.com/asia/se-asia/what-is-the-ph-infighting-about.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Nile Bowie (9 May 2020). "Malaysia's 'Game of Thrones' set for a sequel". Asia Times. https://asiatimes.com/2020/05/malaysias-game-of-thrones-set-for-a-sequel/.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ "Malaysian machinations: How Southeast Asia's veteran leader lost the plot". Reuters. 6 March 2020. https://www.reuters.com/article/us-malaysia-politics-endgame-insight/malaysian-machinations-how-southeast-asias-veteran-leader-lost-the-plot-idUSKBN20T0HZ.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
மேலும் காண்க தொகு
மேலும் படிக்க தொகு
- Chin, James (7 June 2020). "Malaysia: the 2020 putsch for Malay Islam supremacy". The Round Table: The Commonwealth Journal of International Affairs 109 (3): 288–297. doi:10.1080/00358533.2020.1760495. https://www.researchgate.net/publication/342277257.
- Chin, James (2022) "Malaysia in 2021: Another Regime Change and the Search for Malay Political Stability", Southeast Asian Affairs, ISEAS Singapore