மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்

மலேசியாவில் பெரும்பாலான விமான நிலையங்களை நிர்வகிக்கும் மலேசிய விமான நிலைய நிறுவனம்

மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (MYX: 5014), (ஆங்கிலம்: Malaysia Airports அல்லது Malaysia Airports Holdings Berhad; மலாய்: Malaysia Airports Holdings Berhad (MAHB); என்பது மலேசியாவில் உள்ள பெரும்பாலான வானூர்தி நிலையங்களை நிர்வகிக்கும் மலேசிய வானூர்தி நிலைய நிறுவனமாகும். மலேசிய ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports) என்று சுருக்கமாக அழைப்பது வழக்கம்.

மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
வகைஅரசுசார் நிறுவனம்
நிறுவுகை1991 (1991)
தலைமையகம்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சிப்பாங், மலேசியா
தொழில்துறைவிமான நிலைய நிர்வாகம்
வருமானம்ரிங்கிட் 3,870 மில்லியன்
இயக்க வருமானம்ரிங்கிட் 777.3 மில்லியன்
நிகர வருமானம்ரிங்கிட் 40.1 மில்லியன்
பணியாளர்10,000
தாய் நிறுவனம்கசானா நேசனல் (Khazanah Nasional)
இணையத்தளம்www.malaysiaairports.com.my

சிலாங்கூர், சிப்பாங், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ள மலேசியா ஏர்போர்ட்ஸ் அலுவலகத்தில் (Malaysia Airports Corporate Office) இதன் தலைமை அலுவலகம் உள்ளது.[1]

பொது தொகு

மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்; வானூர்தி நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 1992 நவம்பர் மாதம், மலேசிய போக்குவரத்து அமைச்சரால் முறையான உரிமம் பெற்றது.

1999-ஆம் ஆண்டு, இந்த மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (MAHB) வரையறுக்கப்பட்ட ஒரு பொது நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது. அதன் பிறகு கோலாலம்பூர் பங்குச் சந்தையின் (Kuala Lumpur Stock Exchange) முதன்மை வாரியத்தில் பட்டியலிடப்பட்டது.

இந்த நிறுவனம் மலேசியாவில் உள்ள 39 வானூர்தி நிலையங்களைப் பராமரிக்கிறது.

துணை நிறுவனங்கள் தொகு

இதன் கண்காணிப்பில் முதன்மையான வானூர்தி நிலையமாக கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA) விளங்குகிறது. இதன் கீழ் இயங்கும் துணை நிறுவனங்கள்:

  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் - Malaysia Airports Sdn. Bhd. (MASB)
  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (சிப்பாங்) - Malaysia Airports (Sepang) Sdn. Bhd
  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (நியாகா) - Malaysia Airports (Niaga) Sdn. Bhd
  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (தொழில்நுட்பங்கள்) - Malaysia Airports Technologies Sdn. Bhd
  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (சொத்துடைமை) - Malaysia Airports (Properties) Sdn. Bhd
  • கோலாலம்பூர் வானூர்திநிலய தங்கும் விடுதி - K.L. Airport Hotel Sdn. Bhd
  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (விவசாயம்-தோட்டக்கலை) - MAB Agriculture-Holticulture Sdn. Bhd
  • மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் (ஆலோசனை சேவைகள்) - Malaysia Airports Consultancy Services Sdn. Bhd
  • மலேசியப் பன்னாட்டு வான்வெளி மையம் - (Malaysia International Aerospace Centre (MIAC) Sdn Bhd

மேற்கோள்கள் தொகு

  1. "Contact Info." Malaysia Airports. Retrieved 15 July 2019. "Malaysia Airports Holdings Berhad Malaysia Airports Corporate Office Persiaran Korporat KLIA 64000 KLIA, Sepang Selangor, MALAYSIA"

மேலும் காண்க தொகு