மலைச்சாரல் (இதழ்)

மலைச்சாரல் இலங்கையின் மலையகப் பிரதேசத்தின் அட்டன் நகரிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் - மே இதழாக 1984இல் வெளி வந்தது. விலை ரூபாய் 3.00

பணிக்கூற்றுதொகு

  • மலையக கலை இலக்கிய சஞ்சிகை

ஆசிரியர் பக்கம்தொகு

ஆசிரியர் பக்கத்தில் இதழாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலைச்சாரல் மலையக மக்களின் சமூக அரசியல் பொருளாதார விடயங்களுக்காக குரல் கொடுக்கும். மலையக மக்களின் முற்றுமுழுதான விடுதலையை வென்றெடுப்பதற்கான உயிரோட்டக் கருத்துக்கள்: மாறுபட்ட கொள்கைகளாலும், கோட்பாடுகளாலும், தத்துவங்களினாலும் பிளவுகொண்டிருக்கும் மலையகத் தலைமைத்துவ சக்திகளையும் ஒன்றுபடுத்தி, வேற்றுமைக்கப்பால் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்த மலைச்சாரல் பாடுபடும்.

உள்ளடக்கம்தொகு

இவ்விதழில் மலையகம் தொடர்பான கட்டுரைகள், கவிதைகள். துணுக்குச் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

தொடர்பு முகவரிதொகு

மலைச்சாரல், இல 251, மல்லியப்பூ பசார், அட்டன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்சாரல்_(இதழ்)&oldid=857362" இருந்து மீள்விக்கப்பட்டது