மலையாள கலாகிராமம்

கேரளத்தின் கண்ணூர் மாவட்டதில் உள்ள ஒரு கலை மையம்

மலையாள கலாகிராமம் (Malayala Kala Gramam) என்பது வடக்கு கேரளத்தின் கண்ணூர் மாவட்டம், தலசேரி வட்டத்தில் உள்ள புதிய மாகேயில் உள்ள ஒரு நுண்கலை மையம் ஆகும்.

இங்கு சிறார்களும், இளைஞர்களும் அனைத்து வகையான நுண்கலைகளை பயிற்சி செய்வதற்கும் நிகழ்த்துவதற்கும் மேடையை வழங்குகிறது. இந்த மையமானது பகுதிநேர, முழுநேர ஓவியம், சிற்பம், இசை, நடனம், ஓவியம், சுடுமண் சிற்பங்கள் போன்றவற்றிற்கான படிப்புகளை வழங்குகிறது.

இங்கு யோகா, சமசுகிருதமும் போன்றவையும் கற்பிக்கப்படுகிறன. ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தக்கூடியதான சிறப்பான ஒரு நூலகமும் இங்கு உள்ளது.

அமைவிடம் தொகு

இது புதிய மகேவில், கண்ணூருக்கு தெற்கே 28 கி.மீ, தொலைவிலம், தலசேரிக்கு தெற்கே 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்: மாகே தொடர்வண்டி நிலையம், அருகிலுள்ள பெரிய தொடர்வண்டி நிலையம் தலசேரி தொடர்வண்டி நிலையம், அருகிலுள்ள பேருந்து நிலையம் தலசேரி பேருந்து நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் மங்களூர் வானூர்தி நிலையம் (150 கி.மீ), கோழிக்கோடு வானூர்தி நிலையம் (90 கி.மீ) [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாள_கலாகிராமம்&oldid=3008383" இருந்து மீள்விக்கப்பட்டது