மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர்
மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர் (Patriarch of Moscow and Of all Rus' ,உருசியம்: Святейший Патриарх Московский и всея Руси) உருசிய மரபுவழித் திருச்சபையின் உயர் மதக்குருவின் அலுவல்முறை பட்டமாகும். இது பெரும்பாலும் "புனித மிகு" என்ற அடைமொழியுடனேயே வழங்கப்படும். மறைமுதுவர் மாசுக்கோ மறைமாவட்டத்தின் பேராயராக இருந்தபோதும் உருசிய மரபுவழித் திருச்சபையின் அமைப்புச்சட்டப்படி அனைத்துத் தேவாலயங்களையும் நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்.[1] இப்பதவி மாசுக்கோவில் 1589இல் நிறுவப்பட்டது: முதல் மறைமுதுவராக புனித போப் இருந்தார். ரஷ்யாவின் முதலாம் பீட்டர் 1721இல் இப்பதவியை நீக்கினார். 1917இல் மீண்டும் இதனை உருசியாவின் அனைத்துத் தேவாலயங்களின் மன்றம் மீட்டது. மாசுக்கோவின் கிரீல் 2009இல் மறைமுதுவராகப் பொறுப்பேற்றார்.
உருசிய மரபுவழித் திருச்சபை மாசுக்கோ மற்றும் அனைத்து உருசியாவின் மறைமுதுவர்
Святейший Патриарх Московский и всея Руси | |
---|---|
வாழுமிடம் | பன்னிரு அப்போஸ்தலர் தேவாலயம், கிரெம்லின் |
பரிந்துரையாளர் | உருசிய மரபுவழித் திருச்சபையினரின் புனித குருமார் குழு |
பதவிக் காலம் | வாணாள் |
முதலாவதாக பதவியேற்றவர் | புனித ஜாப் |
உருவாக்கம் | 1589 |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Устав Русской Православной Церкви (принят на Архиерейском Соборе 2000 г.; Определениями Архиерейских Соборов 2008 и 2011 гг. в текст Устава был внесен ряд поправок) பரணிடப்பட்டது 2013-02-24 at the வந்தவழி இயந்திரம் // IV. Патриарх Московский и всея Руси.