மாதலி
மாதலி, இந்து தொன்மவியலில் தேவர்களின் தலைவன் இந்திரனின் தேரோட்டியும்,.[1] தூதுவரும் ஆவார். காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் நாடக இலக்கியத்தில், அசுரர்களுக்கு எதிரான போரில், இந்திரனுக்கு ஆதரவாக துஷ்யந்தனை மாதலி அழைத்தார்.[2]பத்ம புராணத்தில், ஆன்மாவின் தன்மை, முதுமை மற்றும் பிற கருத்துக்கள் குறித்து மாதலி மன்னர் யயாதியுடன் உரையாடுகிறார்.[3]
மாதலி | |
---|---|
இராமருக்கு இந்திரனின் தேரை வழங்கும் மாதலி | |
இடம் | தேவ உலகம் |
பெற்றோர்கள் | சமிகர் (தந்தை), தபஸ்வினி (தாய்) |
நூல்கள் | புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் |
பிறப்பு
தொகுவாமன புராணத்தில் மாதலியின் பிறப்பு பற்றிய கதை உள்ளது. முனிவர் ஷமீகருக்கும்-தபஸ்வினிக்கும் பிறந்த குழந்தையே மாதலி ஆவார். இந்திரன் மாதலியை தனது தேரோட்டியாக ஏற்றுக்கொண்டான்.[4]
மகாபலிச் சக்கரவர்த்தியுடனான போரில்
தொகுபாகவத புராணத்தில் இந்திரன் தலைமையிலான தேவர்கள், மகாபலி சக்கரவர்த்திக்கு எதிரான போரில், ஜம்பா எனும் அசுரன் இந்திரனின் தேரோட்டி மாதலியை தனது எரி ஈட்டியால் தாக்கினான். இதனால் மாதலி வலியால் துடித்தார்.அதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் அசுரனுக்கு எதிராக தனது வஜ்ராயுதத்தால் தாக்கி ஜம்பாவின் தலையை துண்டித்தான்.[5]
இராமாயணம்
தொகுஇராமாயணத்தின், யுத்த காண்டத்தில், இராவணன் தன் தேரில் ஏறி, தரையில் நின்றிருந்த இராமருடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட இந்திரன் இராமருக்கு உதவி செய்ய தனது தேரோட்டி மாதலி மூலம் தனது தேரை இராமருக்கு அனுப்பி வைத்தான்.[6]
மகாபாரதம்
தொகுமகாபாரதத்தில் சிவபெருமானிடமிருந்து தவம் செய்து பாசுபத அஸ்திரத்தை பெற்ற அருச்சுனனை, இந்திரனின் ஆணைப்படி, மாதலி அருச்சுனனை தேரில் அமர்த்தி, இந்திரனின் வசிப்பிடமான அமராவதிக்கு அழைத்துச் சென்றான்[7]இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதலி தேரோட்ட அருச்சுனன் நிவாதகவசர்ளை போரில் வென்றான்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dowson, John (2013-11-05). A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History and Literature (in ஆங்கிலம்). Routledge. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-39029-6.
- ↑ SrinagarAshram. Abhijnana Shakuntalam Of Kalidasa M R Kale. p. 42.
- ↑ www.wisdomlib.org (2019-08-23). "Mātali's Discourse on Old Age [Chapter 64]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ www.wisdomlib.org (2009-04-12). "Matali, Matalī, Mātali: 21 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ www.wisdomlib.org (2022-09-01). "End of the Battle Between Gods and Asuras at Nārada's Mediation [Chapter 11]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ www.wisdomlib.org (2020-09-27). "Rama and Ravana renew their Combat [Chapter 103]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ "The Mahabharata, Book 3: Vana Parva: Indralokagamana Parva: Section XLII". www.sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.