மாதிகை (அல்லது மாசிகை) என்பது மாதம் ஒருமுறை வெளியாகும் இதழ் (சஞ்சிகை). பல தமிழ் இலக்கிய இதழ்கள் மாதிகையாகவே வெளியாகின்றன. மாதிகை, திங்களிதழ், மாத இதழ் என்பன ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உலகெங்கிலும், பல மொழிகளிலும், மாதிகைகள் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டில்தான் வெளிவரத்தொடங்கின. தமிழில் பழைய மாதிகைகள் 1860ல் வெளிவந்த தேசோபகாரி, 1864ல் வெளிவந்த தத்துவ போதினி, 1870ல் வெளிவந்த சத்திய வர்த்தினி, 1870ல் வெளிவந்த நற்போதம், 1880ல் வெளிவந்த கோயமுத்தூர் கலாநிதி முதலியன ஆகும். சுமார் 1860ல் தொடங்கி 1957 ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 346 தமிழ் மாதிகைகள் பற்றிய குறிப்புகள் இன்று அறியப்படுவன[1]

மேற்கோள்தொகு

  1. பழந்தமிழ் இதழ்கள், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001, பக். 1-312.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிகை&oldid=1654274" இருந்து மீள்விக்கப்பட்டது