மாதுளையில் உரமிடுதல்

மாதுளையில் உரமிடுதல்தொகு

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு செடிக்கும் ஐந்து கிலோ மண்புழு உரம் வைக்க வேண்டும். மூன்றாம் மாதத்திலிருந்து வாரம் ஒருமுரை நீர்ப்பாசனத்துடன் ஏக்கருக்கு 200லிட்டர் ஜீவாமிர்த கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும்.

இரசாயன உரமாக இருந்தால் செடி ஒன்றிற்கு முதல் வருடம் 10 கிலோ தொழு உரம், 200 கிராம் தழைச்சத்து, 100கிராம் மணிச்சத்து, 400 பிராம் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். ஆறு வருடங்களுக்குப் பிறகு 30 கிலோ தொழு உரம் 600 கிராம் தழைச்சத்து 500 கிராம் மணிச்சத்து, 1200 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும்.

ஆறு மாதங்களில் செடிகளில் பூ எடுக்கத் தொடங்கும் ஆனால், அந்தப் பூக்களை உதிர்த்து விட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே காய்ப்புக்கு விட வேண்டும். அதற்கு முன் காய்க்க விட்டால் செடியின் வளர்ச்சி தடைபடும்.

மேற்கோள்கள்

அக்ரி ஆப் ( நித்ராவின் விவசாயம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுளையில்_உரமிடுதல்&oldid=2722286" இருந்து மீள்விக்கப்பட்டது