மானுஷி சில்லார்

மானுசி சில்லார் (Manushi Chhillar, பிறப்பு: 14 மே 1997) ஓர் இந்திய மாடலாக இருந்து பின்னர் 2017ம் ஆண்டின் இந்திய அழகியாகவும் பின்னர் 2017 நவம்பர் 18 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் வாகை சூடி உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். உலக அழகி போட்டியை வென்ற இந்தியாவின் ஆறாவது பிரதிநிதி சில்லர் ஆவார். கிளப் பேக்டரி மற்றும் மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் ஆகியவற்றின் விளம்பரதூதராக பணியாற்றுகிறார். சில்லர் பாலிவுட்டில் ஒரு நடிகை ஆவார். பிருத்விராஜ் என்ற வரலாற்று நாடக படத்தில் இளவரசி சம்யுக்தாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மனுசி சில்லார்
Manushi Chhillar
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு14 மே 1997 (1997-05-14) (அகவை 24)
அரியானா, இந்தியா
கல்விபுனித தாமசு கல்லூரி, புதுதில்லி
பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரி
தொழில்
  • அழகுப் போட்டி வாகையாளர்
  • விளம்பர மாடல்
உயரம்1.75 m (5 ft 9 in)
தலைமுடி வண்ணம்பழுப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு
பட்ட(ம்)ங்கள்பெமினா இந்திய அழகி 2017
உலக அழகி 2017
Major
competition(s)
பெமினா இந்திய அழகி 2017
(வெற்றியாளர்)
உலக அழகி 2017
(வெற்றியாளர்)

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்தொகு

அரியானாவில் மருத்துவப் பெற்றோருக்கு மகளாக 1997ம் ஆண்டு பிறந்தார்.[1] தலைநகர் தில்லியில் பள்ளி பயின்று அரியானாவின் பகத் பூல்சிங் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிரபல குச்சிப்புடி நடன இயக்குனர் ராஜா மற்றும் ராதா ரெட்டி ஆகியோரிடம் முறையாக நடனம் பயின்றுள்ளார்.

இவரது தந்தை, மித்ரா பாசு சில்லர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) பணியாற்றுகிறார். இவரது தாயார் நீலம் சில்லர், மனித நடத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் இணை பேராசிரியராகவும், நரம்பியல் வேதியியல் துறைத் தலைவராகவும் உள்ளார். [2]

சில்லர் புதுதில்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் கல்வி கற்றார். 12 ஆம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் அகில இந்திய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தில் முதலிடம் பெற்றார். இவர் ஒரு வருடம் மிராண்டா ஹவுஸில் படித்தார். பின்னர் தனது முதல் முயற்சியில் நீட் பரீட்சையில் சித்தியடைந்தார்.[3] சில்லர் சோனிபட்டில் உள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) படித்து வருகிறார்.

சில்லரின் தந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பெங்களூரு பிரிவில் பணிபுரிந்தபோது அவருடன் சில்லர் பெங்களூரு ஐபிஜிஹெச்ஸிலும் கலந்து கொண்டார். மனுசி சில்லர் பயிற்சி பெற்ற குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். இவர் ராஜா மற்றும் ராதா ரெட்டி மற்றும் கௌசல்யா ரெட்டி ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றவர்.[4]

அழகிப் போட்டிகள்தொகு

2016 ஆம் ஆண்டு டிசம்பரில் மிஸ் இந்தியா அமைப்பு நடத்திய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக முடிசூட்டப்பட்டதுடன் சில்லரின் அழகி போட்டிக்கான பயணம் தொடங்கியது.[5] அதன்பிறகு, அவர் ஏப்ரல் 2017 இல் எஃப்.பி.பி ஃபெமினா மிஸ் இந்தியா ஹரியானா பட்டத்தை வென்றார். வருடாந்திர ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் சில்லர் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், 25 ஜூன் 2017 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா 2017 இற்கான வாகையாளராக முடிசூட்டப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மகுடம் சூடினார்.

திரைத்துறையில்தொகு

சந்திரபிரகாஷ் திவேதி இயக்கிய 2020 இல் வெளிவரவிருக்கும் வரலாற்று நாடகப் திரைப்படமான பிருத்விராஜில் சில்லர் தனது நடிப்பில் அறிமுகமாகவுள்ளார். சஹமனா வம்சத்தைச் சேர்ந்த ராஜ்புத்திர மன்னரான பிருத்விராஜ் சவுகான் மற்றும் இளவரசி சம்யுக்தா ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் அக்சய் குமார், மனூசி சில்லர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.[6]

விருதுகள்தொகு

2017 ஆம் ஆண்டில் சி.என்.என்-ஐ.பி.என் இந்தியன் ஆஃப் தி இயர் விருதுகள்[7], சிக்ஸ் சிக்மா ஹெல்த்கேர் விருது ஆகியவற்றில் சிறப்பு சாதனையாளருக்கான விருதுகளை வென்றார்.[8]

2018 ஆம் ஆண்டு மிஸ் பெமினா இந்தியா,[9] 2019 ஆம் ஆண்டில் எல்லே அழகு விருதுகள், லோக்மத் மோஸ்ட் ஸ்டைலிஷ் விருதுகள் என்பவற்றை வென்றார்.[10]

மேலும் 2017 ஆம் ஆண்டின் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண் என்ற விருதையும் பெற்றார். [11]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானுஷி_சில்லார்&oldid=2937458" இருந்து மீள்விக்கப்பட்டது