மான்க்ஸ் பவுண்டு

மான்க்ஸ் பவுண்டு (ஆங்கிலம்: Manx pound) மாண் தீவின் நாணயம். மாண் தீவு ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் மான்க்ஸ் தீவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. மான்க்ஸ் பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே மான்க்ஸ் பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மான்க்ஸ் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.

மான்க்ஸ் பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறிIMP
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100பென்னி
பன்மை 
 பென்னிபென்ஸ்
குறியீடு£
 பென்னிp
வங்கிப் பணமுறிகள்£1, £5, £10, £20, £50
Coins1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2, £5
மக்கள்தொகையியல்
User(s)மாண் தீவு
Issuance
நடுவண் வங்கிமாண் தீவு நிதியமைச்சகம்
 Websitewww.gov.im/treasury
Valuation
Inflation3.6%
 SourceThe World Factbook, 2004
Pegged withபிரிட்டிஷ் பவுண்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்க்ஸ்_பவுண்டு&oldid=1372480" இருந்து மீள்விக்கப்பட்டது