மான் விடு தூது
மான் விடு தூது என்பது மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர் என்பவர் இயற்றிய ஓர் அரிய நூலாகும். இதனை உ.வே. சாமிநாதையர் 1936-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.[1] இந்நூல் 301 கண்ணிகளைக் கொண்டது.
நூலாசிரியர் வரலாறு
தொகுகுழந்தைக் கவிராயர் எனும் புலவர் மிதிலைப்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். தந்தை மங்கைபாக கவிராயர். இவர் இந்நூலைத் தவிர வேறு நூல்கள் எழுதியதாகக் குறிப்புகள் இல்லை. தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார். இவரது தனிப்பாடல்களுள் சிறப்புமிகுப் பாடல் ஒன்றுண்டு. ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் வந்தது. அப்போது தாண்டவராய பிள்ளை ஏழை மக்கள் பலருக்கு உணவிட்டார். அதனைப் பாராட்டி இக்கவிராயர். இவரது செய்யுட்களைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் பரிசுகள் பல வழங்கி மகிழ்ந்தான்.
பாட்டுடைத் தலைவன்
தொகுநூலின் பாட்டுடைத் தலைவன் தாண்டவராய பிள்ளை. இவர் முல்லையூரில் கார்காத்த வேளாளர் குலத்தில் காத்தவராய பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். சிவகங்கை சமஸ்தானத் தலைவராக இருந்த சசிவர்ண துரை அவர்கள் பிள்ளையவர்களின் திறமையைக் கண்டு தமக்கு தளவாயாக அமர்த்திக் கொண்டார். இவர் செய்த அறப்பணிகள் அதிகம்.
நூற் சிறப்புகள் சில
தொகுமானை அம்பால் எய்த பாவத்தால் பாண்டு எனும் அரசன் இறந்த செய்தியும், மான் வாயுவுக்கு வாகனமாக இருப்பதும், கலைக் கோட்டு முனிவர் மான் கொம்பைப் பெற்றதும் ஆகிய புராண இதிகாச வரலாறுகள் பல நூலில் இடம் பெற்றுள்ளன. 'அரியவற்றுள் எல்லாம் அரிதே' எனும் குறளை 42-ஆம் கண்ணியிலும், 'பிறவிப் பெருங்கடல்' எனும் குறளை 44-ஆம் கண்ணியிலும் அழகுற அமைத்துக் காட்டியுள்ளார். இன்னும் பல சிறப்புகள் கொண்டது மான் விடுதூது நூல்.
மேற்கோள்களும் உசாத்துணைகளும்
தொகு- ↑ மான் விடு தூது - குழந்தைக் கவிராயர், மதுரைத் திட்டம், அணுக்கம்: 6-04-2017
- மான் விடு தூது' பதிப்பாசிரியர் ' உ.வே.சாமிநாதையர்- கலைமகள் வெளியீடு 1936