மாபோ எதிர் குயின்ஸ்லாந்து

மாபோ எதிர் குயின்ஸ்லாந்து (Mabo v Queensland) என்பது ஆஸ்திரேலியாவில் உயர் நீதிமன்றத்தினால் 1992, ஜூன் 3 ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்ட புகழ் பெற்ற ஒரு வழக்காகும். இப்புகழ் பெற்ற தீர்ப்பை அடுத்து 1788 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த terra nullius (வெற்று நிலம் - எவருக்கும் சொந்தமில்லாத நிலம்) என்ற கொள்கை இல்லாமல் செய்யப்பட்டு, தலைமுறைகளாக நிலம் வைத்திருந்த (native title) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு நில உரிமை வழங்கப்பட்டது.

இவ்வழக்கு முதன் முதலில் டொரெஸ் நீரிணையின் மறி தீவுகளைச் சேர்ந்த மீரியாம் பழங்குடிகளான எடி மாபோ மற்றும் டேவிட் பாசி, ஜேம்ஸ் ரைஸ் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் குயின்ஸ்லாந்து மாநில அரசுக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

வெளி இணைப்புகள்தொகு