மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்கள்

சமூக காரணங்களுக்காக மீன்கள் ஒரு குழுவாக இருக்கும் உயிரியல் நிகழ்வு

உயிரியலில், சமூகக் காரணங்களுக்காக ஒரு கூட்டமாக இருக்கும் எந்த மீன் கூட்டத்துக்கும் மாப்பு மீன்கள் (Shoaling) என்பது பெயராகும். ஒரே இன மீன்கள் ஒரு கூட்டமாக இலக்கின்றி திரிந்தால் அவை மாப்பு மீன்கள் எனப்படுகின்றன. ஆனால் ஒரு மீன் கூட்டமானது ஒரே திசையில் ஒருங்கிணைப்புடன் ஒத்திசைவுடன் நீந்தினால், அவை கூட்ட மீன்கள் (schooling) எனப்படுகின்றன. [1] பொதுவான பயன்பாட்டில், சொற்கள் சில நேரங்களில் தளர்வாகப் பயன்படுத்தப்படுகின்றன. [1] மீன் இனங்களில் கால் பகுதி மீன்கள் மாப்பு மீன்களாகும். இவை தங்கள் வாழ்நாளின் ஒரு பகுதியில் மாப்பு மீன்களாகவே வாழ்கின்றன. [2]

மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்கள்
Shoaling and schooling
இந்த முள்வால் வகையி மீன்கள் மாப்பு மீன்களாக அலைகின்றன. அவை ஓரளவு சுதந்திரமாக நீந்துகிறன. ஆனால் அவை இணைந்திருக்கும் வகையில், ஒரு சமூகக் குழுவாக உள்ளன.
இந்த புளூஸ்ட்ரைப் ஸ்னாப்பர் கூட்ட மீன்கள் ஆகும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் ஒரே திசையில் நீந்துகிறன.

இவை இந்த மீன்கள் இப்படி ஒரு கூட்டமாக திரிவதன் நோக்கம் பெரிய இரை தின்னி மீன்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொளவது, சிறப்பான மேய்ச்சல், தனக்கான துணையை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல நன்மைகளை மீன்கள் பெறுவது ஆகும். பாய்ம இயக்கவியல் (தனியாக நீந்துவதை விட கூட்டமாக நீந்துபோது குறைந்த அளவு ஆற்றலை வெளியிட்டு விரைவாக நீந்த முடியும்) செயல்திறன் மூலம் மீன்கள் கூட்டத்தினால் பயனடைகின்றன.

உரிய கூட்டத்தைத் தேர்ந்தெடுக்க மீன்கள் பல பண்புகளை எடைபோடுகின்றன. பொதுவாக அவை பெரிய மாப்புகளை விரும்புகிறன. மேலும் அவை தங்கள் சொந்த இனத்தின் மாப்பாகவும், அளவு மற்றும் தோற்றத்தில் ஒத்த கூட்டமாக, ஆரோக்கியமான மீன்கள், உறவினர்கள் (அங்கீகரிக்கப்படும் போது) போன்றவை ஆகும்.

மாப்பு மீன்களில் தோற்த்தில் தனித்து தோன்றும் எந்தவொரு மீனும் வேட்டையாடிகளால் குறிவைக்கப்படும் என்று "விந்தை விளைவு" கூறுகிறது. மீன்கள் ஏன் தங்களைப் ஒத்த மீன்களுடன் திரள விரும்புகின்றன என்பதற்கான காரணம் இதுவாகும். விந்தை விளைவு இவ்வாறு கூட்டத்தை ஒரே மாதிரியாக மாற்ற முனைகிறது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Pitcher and Parish 1993, page 365.
  2. Shaw, E (1978). "Schooling fishes". American Scientist 66 (2): 166–175. Bibcode: 1978AmSci..66..166S.