மாயா பஜார் (1995 திரைப்படம்)
மாயபஜார் (Mayabazar) என்பது 1995 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இப்படத்தை கேயார் இயக்க மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்தார். இப்படத்தில் ராம்கி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தார். இப்படத்தில் சுவர்ணா மேத்யூ, விசு, விவேக், அஜய் ரத்னம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
மாயா பஜார் | |
---|---|
இயக்கம் | கேயார் |
தயாரிப்பு | மீனா பஞ்சு அருணாசலம் |
கதை | பிரசன்னா குமார் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராம்கி ஊர்வசி சுவர்ணா மேத்யு விசு விவேக் அஜய் ரத்னம் |
ஒளிப்பதிவு | ராபர்ட் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | பி. ஏ. ஆர்ட் புரோடக்சன்ஸ் |
வெளியீடு | 12 ஆகத்து 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுசுஜி (ஊர்வசி) கோடீஸ்வரர் விஸ்வநாதனின் (விசு) ஒரே மகள். குழந்தைத் தனமாக சேட்டை செய்பவர். தனது தந்தைக்கு தனிச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு நேர்காணலை நடத்துகிறார். அதில் அவர் ராமை (ராம்கி) செயலாளராக தேர்வு செய்கிறார். விஸ்வநாதனின் நண்பர் மூர்த்தி (கிட்டி), மேலாளர் (அஜய் ரத்னம்), ஸ்வர்ணா ஆகியோர் விஸ்வநாதனின் முழு சொத்தையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். அதற்கு ஏதுவாக ராஜாவுக்கு (கமலேஷ்) சுஜியை திருமணம் செய்துவைக்க மூர்த்தி ஏற்பாடு செய்கிறார். இருப்பினும் சுஜி ராமை மணக்கிறார்.
விஸ்வநாதன் திடீரென மாரடைப்பால் இறந்துவிடுகிறார். ஊட்டிக்குச் செல்லும் சுஜி ராமாலும், மூர்த்தியாலும் கொல்லப்படுகிறாள். சுஜி தன்னைக் கொன்றவர்களை பழிவாங்க பேயாக மாறுகிறாள். போலி பேயோட்டியான மாயம்மா (ஊர்வசி) தோற்றத்தில் சுஜியைப் போலவே இருக்கிறாள். எனவே அவள் தன்னைப் போலவே நடந்துகொள்ளும்படி கேட்கிறாள். உண்மையான ராம் வில்லன்களால் கடத்தப்படுள்ளார் என்பதும், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சசை மூலம் ராம் போல ராஜாவின் முகம் மாற்றப்பட்டது என்று சுஜி கூறுகிறாள். இதன்பிறகு மாயம்மா சுஜி போல வருகிறாள். அவளைச் சுற்றியுள்ள எல்லா கெட்டவர்களும் அவள் சுஜியாக இருக்காது என்று சந்தேகிக்கிறார்கள். உண்மையில் அவள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பதே கதையின் முக்கிய அம்சமாகும்.
நடிகர்கள்
தொகு- ராம்கி ராம்/ராஜா
- ஊர்வசி சுஜி/மாயம்மா
- சுவர்ணா மேத்யு ஸ்வர்ணாவாக
- விசு விசுவநாதனா (சுஜியின் தந்தையாக)
- விவேக் குப்புவாக
- அஜய் ரத்னம் அஜயாக
- கிட்டி மூர்த்தியாக
- சின்னி ஜெயந்த்
- தியாகு தங்கமாக
- பாண்டு காவல் அதிகாரியாக
- ஜூனியர் பாலையா
- சுவாமிநாதன் சுவாமிநாதனாக
- கமலேஷ் ராஜாவாக
- மாஸ்டர் சிரிஷ்
இசை
தொகுஇப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதினர்.[1]
- "ஒரு ஊர்ல" - எஸ். ஜானகி
- "பர்த்டே பார்ட்டி" - சித்ரா
- "அடாடா இங்கு" - ஜாலி ஆபிரகாம்
- "அடடா ஓரு" - சித்ரா
- "நான் பொறந்து" - ஜனகி
- "முத்து முத்து" - எஸ்.பி.பி., சித்ரா
வரவேற்பு
தொகுநியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்த படத்திற்கு "இந்தப் படம் தனித்த அழகைக் கொண்டுள்ளது. நிச்சயம் இது ஊர்வசியின் தனிப்பட்ட மந்திரத்தால்" என்று எழுதியது.[2]