மார்சியா பாசல்

மார்சியா பாசல் (Marzia Basel) ஆப்கானித்தான் நாட்டின் முன்னாள் நீதிபதியாவார். தலிபான்கள் ஆட்சியின் போது இவர் தனது சொந்த வீட்டில் பெண்களுக்கு இரகசியமாக கல்வி கற்பித்தார். ஆப்கானித்தான் முற்போக்கு சட்ட அமைப்பை இவர் நிறுவினார்.

மார்சியா பாசல்
Marzia Basel
பிறப்பு1968
காபூல்
குடியுரிமைஆப்கானித்தான்
படித்த கல்வி நிறுவனங்கள்சியார்ச்சு வாசிங்டன் பல்கலைக்கழகம்

சுயசரிதை தொகு

பாசல் காபூல் நகரத்தில் ஒரு நடுத்தர வர்க்க தாராளவாத குடும்பத்தில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு நீதிபதியாகவும், சகோதரிகள் வழக்கறிஞர்களாகவும் இருந்தனர். 1995 ஆம் ஆண்டில் பாசல் ஒரு நீதிபதியாகப் பதவியேற்றார்.[1] ஒரு வருடம் கழித்து தலிபான்கள் அனைத்து பெண் தொழில் வல்லுநர்களையும் தடைசெய்து பெண்கள் கல்வி கற்பதை தடை செய்தனர். அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டியது கண்டிப்பானதாக மாறியது. கோடையில் பர்தா அணிந்தபோது அது மிகவும் சூடாக இருந்ததாகவும் தான் மெதுவாக மூச்சுத் திணறல் போல் உணர்ந்ததாகவும் பின்னாளில் இவர் நினைவு கூர்ந்தார். அந்த சிறிய கண்ணி கூண்டிலிருந்து வெளியே பார்த்தபோது தான் ஒரு கூண்டு விலங்கு போல் உணர்ந்ததாகவும் இவர் குறிப்பிட்டார். கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளிடம் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பறிக்கின்றார்கள்." இதுதான் எனக்கும் மற்ற பெண்களுக்குமான பர்தா நிலை என்றும் இவர் குறிப்பிட்டார்.

தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் கல்வி கற்பதற்கான சட்டங்களை மீறி, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாசல் தனது வீட்டில் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பித்தார். எட்டு முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் சுமார் 350 முதல் 400 மாணவர்கள் பாசலிடம் கல்வி கற்றனர். இவரது மாணவர்களில் சிலர் தாலிபான் ஆதரவாளர்களின் மனைவிகளாக இருந்தனர். கல்வி கற்பிக்கும் செய்தி தெரிந்தால் பாதுகாப்பு மற்றும் துணைத் தடுப்பு அமைச்சகம் இவரை சந்திக்க வரும் என்று அவர்கள் எச்சரித்தனர். தாலிபான் ஆட்சி அகற்றப்படுவதற்கு சற்று முன்பு, பாசல் தனது பாதுகாப்பிற்காக அகதியாக பாக்கித்தானுக்குச் தப்பிச் சென்றார்.

2002 ஆம் ஆண்டு இவர் ஆப்கான் பெண் நீதிபதிகள் சங்கத்தை நிறுவினார்.[2] ஆப்கானித்தானில் சட்டத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் இவரது முயற்சிகள் 2005 ஆம் ஆண்டில் 1 பெண்ணாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு பெண் பாதுகாப்பு வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை 150 பெண்களாக அதிகரித்தது.[2] பாசெல் 2009 ஆம் ஆண்டு முதல் இவ்வமைப்பின் இயக்குநராக உள்ளார்.

2002 ஆம் ஆன்டில் பாசல் அமெரிக்கா சென்று, அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ், அமெரிக்க வெளியுறவு செயலாளர், கொலின் பவல் மற்றும் பிறரை சந்தித்து ஆப்கானித்தானுக்கு கூடுதல் உதவிகள் கேட்டார்.[3] வருகை தரும் நாட்டின் பழக்கவழக்கங்களை மதிக்கும்படி நடந்து கொண்டாலும் தலைமுடியை மறைக்க எப்போதும் ஒரு கதர் அணியாததற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.[3] இவர் பணிநீக்கம் செய்யப்பட்டாரா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனால் பாசல் ஒரு சிறுவர் நீதி திட்டத்தை உருவாக்க உதவுவதற்காக யுனிசெப்பில் சேர கிளம்பினார் என்று பதிவு செய்யப்பட்டது. [3]

தொடர்ந்து பெண்களின் சட்ட உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பாசல் தீவிரமாக இருந்தார். 2005 ஆம் ஆண்டில், சியார்ச்சு வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4]

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாசல் இறுதியில் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. 2011 ஆம் ஆண்டில் தாலிபான்களால் இவரது வீட்டு வாசலில் செய்திகள் விடப்பட்டன, அவர்கள் இவரைக் கண்டுபிடித்தால் கொன்றுவிடுவதாக அச்செய்திகள் கூறின.[2] இவருடைய கணவரும் தந்தையும் பாதுகாப்பிற்காக ஆப்கானித்தானில் இருந்து வெளியேறும்படி பாசலை வற்புறுத்தினர்.[2] அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு ஆதரவு அமைப்புகள் இல்லாததால், அவர் கனடாவுக்கு செல்வதைத் தேர்ந்தெடுத்தார்.[2] தற்போது பாசல் டொராண்டோவில் வசிக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Contested Terrain: The Future of Afghan Women". International Security. May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 September 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Contested Terrain: Reflections With Afghan Women Leaders. 
  3. 3.0 3.1 3.2 "Afghan Judge in Tangle Over Her Uncovered Hair". Toronto Star. 26 December 2002. http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=nfh&AN=6FP1487868465&site=ehost-live. "Afghan Judge in Tangle Over Her Uncovered Hair". Toronto Star. 26 December 2002. Retrieved 18 September 2015 – via Newspaper Source – EBSCOhost.
  4. Mills, Margaret A. (2006). "'Afghan Women Leaders Speak': An Academic Activist Conference, Mershon Center for International Security Studies, Ohio State University, November 17–19, 2005". NWSA Journal 18 (3): 191–201. https://muse.jhu.edu/journals/nwsa_journal/v018/18.3mills.html. பார்த்த நாள்: 18 September 2015. 

புற இணைப்புகள் தொகு

மனித உரிமைகள் ஆணையம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்சியா_பாசல்&oldid=3857657" இலிருந்து மீள்விக்கப்பட்டது