மார்வன் நோய்த்தொகை

மார்வன் நோய்த்தொகை (Marfan syndrome) (MFS) இணைப்பிழைய மரபியல் கோளாறு ஆகும்.[1] நோய்த்தாக்க வீதம் ஆளுக்காள் மாறும்.[1] மார்வன் நோய்த்தொகை உள்ளவர்கள் நெட்டையாக நீளமான கைகளும் கால்களும் கை, கால் விரல்களும் பெற்றிருப்பர்.[1] இவர்கள் நெளிவானமூட்டுகளுடன் நன்றாக இயங்கும் திறனையும் பக்கக் கூன் ஊனத்தையும் பெற்றிருப்பார்.[1] இவர்கள் இதய, தமனிச் சிக்கல்களைப் பெற்றிருப்பர். குறிப்பாக ஈரிதழ்க் கவாடத் துருத்தலும் தமனிக்குழல் வீக்கமும் பெற்றிருப்பர்.[1][6] பிற தாக்கம் விளையும் உறுப்புகளாக நுரையீரல்கள், கண்கள், எலும்புகள் தண்டுவடநாண் உறை ஆகியன அமையும்.[1]

மார்வன் நோய்த்தொகை
Marfan syndrome
ஒத்தசொற்கள்மார்வனின் நோய்த்தொகை
சிறப்புமருத்துவ மரபியல்
அறிகுறிகள்நெட்டையான, ஒல்லியான உடலும் நீண்ட கைகளும் கால்களும் கை, கால் விரல்களும்[1]
சிக்கல்கள்பக்கக் கூன் ஊனம், ஈரிதழ்க் கவாடத் துருத்தல், தமனிக் குழல் வீக்கம்[1]
கால அளவுநெடுங்காலம் வரை[1]
காரணங்கள்உடலக் குறுமவக ஓங்கல் வகை)[1]
நோயறிதல்கெண்ட் வரன்முறை[2]
மருந்துBeta blockers, calcium channel blockers, ACE inhibitors[3][4]
முன்கணிப்புஇயல்பான ஆயுள் எதிர்பார்ப்பு[1]
நிகழும் வீதம்5,000 முதல் 10,000 பேருக்கு ஒருவருக்கு[3]

இது உடலக குறுமவக ஓங்கல் மரபியல் கோளாறாகும்.[1] இதன் 75% பெற்றோரிடம் இருந்தும் 25% புதிய சடுதி மாற்றத்தாலும் ஏற்படுகிறது.[1] இது நுண்ணாரிழைப் புரதங்களை உண்டாக்கும் மரபனில் சடுதிமாற்றத்தை விளைவித்து இயல்பற்ற இணைப்பிழையங்களை உருவாக்குகிறது.[1] கெண்ட் வரன்முறையால் நோயறியலாம்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 "What Is Marfan Syndrome?". NHLBI, NIH. October 1, 2010. Archived from the original on 6 May 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  2. 2.0 2.1 "How Is Marfan Syndrome Diagnosed?". NHLBI, NIH. October 1, 2010. Archived from the original on 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  3. 3.0 3.1 3.2 "Marfan Syndrome". National Organization for Rare Disorders. 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
  4. "How Is Marfan Syndrome Treated?". NHLBI, NIH. October 1, 2010. Archived from the original on 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  5. Staufenbiel, Ingmar; Hauschild, Christian; Kahl-Nieke, Bärbel; Vahle-Hinz, Eva; von Kodolitsch, Yskert; Berner, Maike; Bauss, Oskar; Geurtsen, Werner et al. (2013-01-01). "Periodontal conditions in patients with Marfan syndrome - a multicenter case control study". BMC Oral Health 13: 59. doi:10.1186/1472-6831-13-59. பன்னாட்டுத் தர தொடர் எண்:1472-6831. பப்மெட்:24165013. 
  6. "What Are the Signs and Symptoms of Marfan Syndrome?". NHLBI, NIH. October 1, 2010. Archived from the original on 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.

வெளி இணைப்புகள் தொகு

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வன்_நோய்த்தொகை&oldid=3587873" இலிருந்து மீள்விக்கப்பட்டது