மாற்றுச்சொல்

மொழியியல் மற்றும் சொற்பிறப்பியலில் மாற்றுச்சொல் (suppletion) என்பது பாரம்பரியமாக புரிந்துகொள்ளப்பட்ட சில சொற்கள் வடிவால் எத்தகைய தொடர்பும் இல்லாத இருவேறு இணைச்சொற்களாக இருக்கும். ஆனால் அவை சுட்டும் பொருளால் இணைந்திருக்கும் நிலையைக் கொண்டுள்ளன. மொழியியலார் இத்தகைய சொல்லை மாற்றுச்சொல் என்கிறார்கள். புதியதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முற்படும் ஒருவருக்கு மாற்றுச்சொல் அறிமுகமாகும்போது அவருக்குள் குழப்பம் உண்டாகி அந்த மாற்றுச் சொல்லை வழக்கத்திற்கு மாறான சொல், முற்றிலும் வேறுபட்டசொல் என்றே கருதுவார். வேர்ச்சொல்லில் இருந்து புதுச்சொற்கள் கிளைத்து உருவாகும் என்ற புரிதலுடன் மொழி கற்றுக் கொண்டிருக்கும் அவருக்கு மாற்றுச்சொல் என்ற புதுஅறிமுகமும் பயன்பாடும் சிக்கலை உண்டாக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு மொழியில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மாற்றுச்சொற்கள் பாரபட்சமற்ற முறையில் தடை செய்யப்படுகின்றன[1].

மாற்றுச்சொல் மாறுபாடுகள்

தொகு

பரவலான புழக்கத்தினால் பெறப்பட்ட சொல் வடிவங்களை அடிப்படைச் சொல்லில் இருந்து இவ்வாறு பெறப்பட்டதென எளிய விதிகள் மூலம் உய்த்தறிய முயற்சிப்பது ஒர் ஒழுங்கற்ற முன்னுதாரணம் ஆகும். உதாரணமாக சிறிதளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டுள்ள ஒருவரால் பெண் (girl) என்ற ஒருமை சொல்லுக்கு நிகரான பன்மைச் சொல் பெண்கள் (girls) என்று உய்த்தறிய முடியும். ஆனால் ஆண் (man) என்ற ஆங்கில ஒருமைச் சொல்லுக்குரிய பன்மையான ஆண்கள் (men) என்ற சொல்லை உய்த்தறிய இயலாது. மொழியைக் கற்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய மாற்றுச்சொற்களை மிகவும் ஆழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கற்றபின்னர், ஏற்றத்தாழ்வுடன் பேசும் பேச்சின் எந்தப் பகுதியிலும் அவர்களால் இத்தகைய மாற்றுச்சொற்களை பயன்படுத்த முடியும். முதல் மொழி கையகப்படுத்தல் ஆய்வுகள், மொழியியல்உளவியல், மொழி கற்பித்தல் கோட்பாடு ஆகிய துறைகள் பல்வேறு மரபியல் காரணங்களுக்காக இத்தகையச் சொற்களை மாற்றுச்சொற்கள் என்ற அளவில் நினைவில் கொண்டால் போதும் என்கின்றன. அதேநேரத்தில் வரலாற்று மொழியியல் ஆய்வுகள் இத்தகைய மாற்றுச்சொற்கள் எவ்வாறு தோன்றி வேறுபட்டிருக்கலாம் என்பதை விளக்க முற்படுகின்றன.

மொழியின் வரலாறு மற்றும் அவற்றின் ஒற்றுமைத் தன்மையை ஆராயும் அறிவியல் துறை முன்னேற்றங்கள் (man:men) போன்றவற்றின் ஒரு சொல் வடிவம் மாறியதற்கான காரணங்களை விளக்குகின்றன. நடப்பு சொல் வடிவங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வழக்கமான பயன்பாட்டில் இருந்த சொற்களாக இருந்திருக்கலாம். மனிதர்களில் இருந்து மாக்களை வேறுபடுத்தி அறிவதற்காக வரலாற்று மொழியியலாளர்களால் உருவாக்கப்பட்டதே மாற்றுச்சொல் என்பதாக மொழியியலாளர்கள் நம்புகின்றனர்.

உதாரணங்கள்

தொகு

ஆங்கிலத்தில் good என்ற சொல் நிகழ்காலத்திற்கு உரியது ஆகும். Better என்ற சொல் இறந்த காலத்திற்கு உரியது ஆகும். வடிவத்தால் இரண்டு சொற்களும் தொடர்பில்லாத இருவேறு சொற்கள் போலக் காணப்படுகின்றன. அடி, பின்னொட்டு என்று எப்படிப் பிரித்துப் பார்த்தாலும் இரு சொற்களுக்கிடையே ஒரு தொடர்பும் காணப்படவில்லை. இதுவே மாற்றுச் சொல்லாகும். இங்ஙனமே go, went போன்ற சொற்களையும் உதாரணமாகக் கூறலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Andrew Hippisley, Marina Chumakina, Greville G. Corbett and Dunstan Brown. Suppletion: frequency, categories and distribution of stems. University of Surrey. [epubs.surrey.ac.uk/2229/1/hippisley_et_al-suppletion.pdf]

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்றுச்சொல்&oldid=2746900" இலிருந்து மீள்விக்கப்பட்டது