மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை என்ற ஊரில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகும். தேசிய கல்விக்கொள்கையின் வழிகாட்டல்களின் படி (NPE), மத்திய அரசின் நிதியுதவியுடன் கல்வித்துறையில், ஆசிரிய கல்வியின் மறுசீரமைப்பிற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டன.அவ்வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறையில் இப்பயிற்சி நிறுவனம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது [1].

ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முகப்புத் தோற்றம்

அமைப்பு தொகு

இந்த நிறுவனம் தஞ்சாவூரில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் கும்பகோணம் - மயிலாடுதுறை செல்லும் சாலையில் ஆடுதுறை பேரூராட்சியில் அமைந்துள்ளது.

ஏழு கிளைகள் தொகு

  1. பணிமுன் பயிற்சி
  2. பணியிடை பயிற்சி
  3. பணிப்பட்டறிவுக் கல்வி
  4. மாவட்ட வள அலகு
  5. திட்டமிடலும் மேலாண்மையும்
  6. கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கமும் மதிப்பிடுதலும்
  7. கல்வி நுட்பவியல்

ஏழு கிளைகளின் செயல்பாடுகள் தொகு

பணிமுன் பயிற்சி பிரிவு தொகு

  • ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக்கல்வியில்(பனிரெண்டாம் வகுப்பு)தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது.இவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர்.[2] [3]
  • கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் மேலும்,கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தலையும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
  • கற்பிக்கும் முறைகளை கவனித்தல்.
  • உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.

பணியிடை பயிற்சி பிரிவு தொகு

 
ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி நடைபெறும் காட்சி

மாவட்ட வள அலகு பிரிவு தொகு

  • பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே மாவட்டம் முழுமைக்கும் நடைபெறும் முறைசாராக் கல்வி, மற்றும் முதியோர் கல்விக்காக திட்டமிடுதல், இணைப்பாளராக இருத்தல்.
  • ஊக்குநர், கருத்தாளர், மேற்பார்வையாளர் ஆகியோருக்குப் பயிற்சி அளித்தல்.

திட்டமிடல், மேலாண்மை பிரிவு தொகு

  • பல்வேறு மாவட்டத் திட்டங்களுக்கு ஏற்ப புள்ளிவிவர அடிப்படையில் விவரங்களைத் திரட்டிப் பாதுகாத்தல்.
  • கல்வி திட்டமிடுவோர், நிர்வாகம் செய்வோர்களுக்குத் தேவையான பள்ளிச்சேர்க்கை, பள்ளியை விட்டு நின்றுவிடல், வயது வந்தோர் கல்வி, பெண்கல்வி, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர், ஊனமுற்றோர், இடையுறுகள், கல்வி நிலையங்களை மதிப்பிடுவதற்கரிய உத்திகள், போன்றவற்றுக்குத் தேவையான திட்டங்களை வழங்குதல்.
  • பள்ளி பாடங்களை உருவாக்கல், நுண்ணிலைத்திட்டமிடுதல், பள்ளி ஒருங்கிணைப்பு உருவாக்கல் போன்றவற்றில் கல்வி அதிகாரிகளுக்கு உதவி செய்தல்.

பணிப்பட்டறிவுப் பிரிவு தொகு

  • வேலைசார் பட்டறிவுக் கல்விக்கு ஏற்ப உள்ளுர் துணைகளைத் தேர்ந்தெடுத்தல், கலைத்திட்ட அலகுகளை வளர்த்தல், கற்றல் கற்பித்தல் பொருட்கள், மலிவு விலை துணைக்கருவிகள், மதிப்பீட்டுக் கருவிகள் போன்றவற்றை ஆயத்தம் செய்தல்.
  • பயிற்சி நிறுவன எல்லைக்குள் உள்ள விடுதிகள், விளையாடும் இடம், சாலை, தோட்டம், சுற்றுப்புறத் தளவாடப் பொருட்களமாகியவற்றின் துாய்மையைப் பேணுவதற்கான செயல்களை ஏற்படுத்தல்.

கல்வி நுட்பவியல் பிரிவு தொகு

  • பயிற்சி நிறுவனத்திற்கு மற்ற பிரிவுகளில் பணிபுரிவோர், கருத்தாளர்களின் ஒத்துழைப்புடன் எளிய, பயன்மிகு மலிவு விலை துணைக்கருவிகளைப் பல்வேறு பாடங்களுக்கும், தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்விக்கும், விளக்கப்படங்கள், படிமங்கள், வரைபடங்கள், பதிவுநாடா, பாடல்கள், நழுவங்கள் போன்றவற்றை தயார் செய்தல்.
  • மலிவு விலை துணைக்கருவிகள் தயாரிப்பதற்கான பணிப்பட்டறை நடத்துதல்.
  • கல்வி தொழில்நுட்பத்தை கல்வி செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்குப் பணியிடைப்பயிற்சி நடத்துதல்.
  • நிறுவனக் காட்சி, கேள்விக் கருவிகளைப் பாதுகாத்தல்.

கலைத்திட்டம், கற்றல் பொருள் உருவாக்கம், மதிப்பிடுதல் பிரிவு தொகு

  • உள்ளுர் சூழ்நிலைக்கேற்ப தொடக்கக் கல்விக்கும், ஆசிரியர்களுக்கான திட்டங்களுக்கும், நடைமுறையில் உள்ளவற்ருக்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வளர்த்தல், கலைத்திட்டத்திற்குத் துணைபுரியும் துணைநுால்களை தயாரித்தல்.
  • தேர்வு வினா வங்கி, தர அளவீடு, உற்றுநோக்குதல், குறை கண்டுணரும் தேர்வு, குறை நீக்கக் கற்பித்தல், திறன்மிகு மாணவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவற்றுக்கு, வழிகாட்டும் குறிப்புகளை அளித்தல் (பணிப்பட்டறை மூலம்) பணியிடைப் பயிற்சி அளித்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
  2. http://www.dailythanthi.com/2014/07/07221238/Elementary-Education-Teacher-Chartered-For-study-Student.vpf
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
  4. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=641257[தொடர்பிழந்த இணைப்பு]