மாவீரர் துயிலுமில்லப் பாடல்

(மாவீரர் நாள் பாடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் துயிலுமில்லப் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை எழுத, இசைவாணர் கண்ணன் இப்பாடலுக்கு இசையமைத்தவர். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார். இவருடன் மேஜர் சிட்டு, மணிமொழி, ராதிகா, அபிராமி ஆகியோர் பின்னணியில் பாடியவர்கள்.[1][2][3]

இப்பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது. ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது. தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம்.[4][5]

முழுப் பாடல் தொகு

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!

எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்!

அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

  1. "வெளிச்சம் 2002.07-08". https://noolaham.net/project/177/17666/17666.pdf. 
  2. "ஐபிசி தமிழா லண்டன் 2017 - தாயகக் கலைஞர் வர்ணராமேஸ்வரன் (37 mins)". https://www.facebook.com/radioibctamil/videos/1897613380496715. 
  3. "Collective message from Tamils on Heroes Day: Rajapaksas can’t kill Tamil Eelam dream". https://tamilnet.com/art.html?catid=13&artid=39651. 
  4. "மாவீரர் நாள் மரபாகி வந்த கதை - EelamHouse". https://eelamhouse.com/?p=2591. 
  5. "துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு - EelamHouse". https://eelamhouse.com/?p=2239.