மா பயிரில் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

மா பயிரில் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்தொகு

நாப்தலின் அசிடிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை 20 பிபிஎம் என்ற அளவில் இரண்டு முறை 15 நாள்கள் இடைவெளியில் பூத்த பின் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்கும்

பூ பூக்காத மரங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் 0.5% யூரியா ( 5 கிராம் 1 லிட்டர் நீருக்கு) அல்லது 1% பொட்டாசியம் நைட்ரேட் (10 கிராம் 1 லிட்டர் நீருக்கு ) கரைசல் தெளிக்க வேண்டும். மாம்பயிரில் பொதுவாகப் பூங்கொத்தில் 85% மலர்கள் உதிர்ந்து 15% பூக்களிலேயே காய்ப்பிடிப்பு ஏற்படுகிறது.