மின்ட் கடிகார கோபுரம்

மின்ட் கடிகார கோபுரம்தொகு

சென்னை, ஜார்ஜ் டவுனில் தனித்து நிற்கும் கடிகார கோபுரம் தான் இந்த மின்ட் கடிகார கோபுரம் சென்னையில் உள்ள தனித்து நிற்கும் கடிபார கோபுரங்களில் இது நான்காவது கோபுரமாகும். மற்ற மன்று கோபுரங்கள் ஒன்று இராயப்பேட்மைவிலும், இரண்டாவது ட்வ்டனிலும் மூன்றாவது புளியந்தோப்பிலும் உள்ளன.

வரலாறுதொகு

புரசைவாக்கம், டிவுட்டன் சந்திப்பில் 1900 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முதல் தனித்து நிற்கும் கடிகார கோபுரம் கட்டப்பட்டது. இக்கோபுரம் கட்டப்படுவதற்கு முன்பு 19ஆம் நுற்றுண்டின் இறுதியில் வாழ்ந்த புனித ஜார்ஜ் என்பவர் தினந்தோறும் இரவு எட்டு மணிக்கு துப்பாக்கி சுடும் பழக்கம் உடையவர். இந்ந இவரது பயிற்சி இந்த முதல் தனித்து நிற்கும் கடிகார கோபுரம் கட்டப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது. இதன் பிறகு நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஜார்ஜ் டவுனில் மின்ட் சந்திப்பில் அனைவரும் நன்கு அறிந்த மின்ட் கடிகார கோபுரம் கட்டப்பட்டது- இந்த கடிகார கோபுரம், தென்னிந்தியாவின் புகழ் பெற்ற கடிகார நிறுவனம் கனி மற்றும் சன்ஸ் நிறுவனத்தினரால் கட்டப்பட்டது. 1909 ஆண்டில் ஈரானியர் ஷாஜி மிர்சா அப்துல் வனி நமாசி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடிகார நிறுவனம் , இராயப்பேட்டை, சூளை மற்றும் திருவொற்றியூர் போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ள கடிகார கோபுரங்களுக்கு கடிகாரங்களை அளித்துள்ளது.

அமைவிடம்தொகு

இந்த கடிகார கோபுரம் மின்ட் சந்திப்பு பேசின் பிரிட்ஜ் சாலை, வடக்குச் சுவர் சாலை , மின்ட் தெரு மற்றுஙம் பழைய சிறைச்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

கடிகார8 கோபுரம்தொகு

பத்தொன்பதால் நுற்றாண்டில், கலை அம்சத்துடன் உயர்ந்தரகமான வண்ணப்பூச்சைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோபுரம் அறுபது அடிஉயரம் கொண்டது. கடிகாரத்தின் முட்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டது. அஇக்கடிகாரம் ஒரு பெண்டுலத்தை உடையது. இதன் ஊசலாடும் தன்மை எடை நகரும் தொழில் நட்பத்தைக் கொண்டு ஓடுகிறது. கடிகாரத்தின் உள் தொழில் நுட்பம் ஆறு இரும்புத் தகடுகளை உலோகக் கயிலுகள் மலம் சங்கிலிச் சக்கரங்களை இணைக்கிறது. இச்சக்கரம் சுற்றும் போது, அவை இரும்புத் தகடுகளை கீழ்ப்/புறமாக நகர்த்த, கடிகாரத்தின் நடுவில் உள்ள பித்தளைப் பொத்தானை நகர்த்துகிறது.

புதுப்பித்தல்தொகு

பல காரணங்களால் பழுதடைந்தது இந்த கடிகாரம் 2013 ஆண்டு மின்ட் அமம்பாலத்தை கட்டும் பணியில் ஈடுபட்ட போது சென்னை மாநகராட்சி இக் கபுரத்தின் கடிகாரத்தை புதுப்பிக்க முடிவு செய்தது. 2014 ஜனவரி மாதம் சென்னை மாநகராட்சி மற்றும் பி.ஆர். ஆர் மற்றும் சன்ஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து இக்கோபுரம் மற்றும் கடிகாரத்தைப் புதுப்பித்தன 2014 ஜனவரி 17 ஆம் தேதி முதல் கடிகாரம் நன்முறையில் ஓடிக்கொண்க்கிறது.