மியோனியம்
மியோனியம் (Muonium ), ஐதரசன் அணுவின் கருவில் எப்படி ஒரு புரோட்டானும் சுற்றுப் பாதையில் ஓர் எலக்ட்ரானும் உள்ளதோ அதேபோல் ஒருநேர்மின்னூட்டம் கொண்ட ஒரு மியூ மேசானைச் சுற்றி எலக்ட்ரான் சுற்றிவரும் துகள் மியோனியம் எனப்படும். ஐதரசனின் கருவில் ஒரு புரோட்டான் இருக்கும் மியோனியத்தில் ஒரு நேர்மின்னூட்டம் கொண்ட μ மேசான் இருக்கும்.