மிரி மாநகராட்சி

மிரி மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Miri; ஆங்கிலம்: Miri City Council); (சுருக்கம்: MBM) என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் மிரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.

மிரி மாநகராட்சி
Miri City Council
Majlis Bandaraya Miri
Majlis Bandaraya Melaka Bersejarah (MBMB) seal
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு20 மே 2005
முன்புமிரி நகராட்சி
(Miri Municipal Council)
தலைமை
மாநகர முதல்வர்
ஆதாம் இயி சியூ சங்
(Adam Yii Siew Sang)
1 சூலை 2016
மாநகராட்சி துணை முதல்வர்
சுலாகி முகமட்
(Julaihi Mohamad)
1 சனவரி 2022
மாநகராட்சி செயலாளர்
முகமட் சுனைடி மொகிடின்
(Mohamad Junaidi Mohidin)
1 சனவரி 2022
கூடும் இடம்
மிரி மாநகராட்சி தலைமையகம்
Jalan Raja, 98000 Miri, Sarawak,
மிரி, சரவாக்
வலைத்தளம்
www.miricouncil.gov.my

2005 மே 20-ஆம் தேதி மிரி நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு இந்த மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 997 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.

பொது

தொகு

மாநகராட்சி முதல்வரும்; மற்றும் 28 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற சரவாக் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மாநகராட்சியின் நோக்கம்; மிரி மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[1]

வரலாறு

தொகு

மிரி நகராட்சி 1930-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. அதன் பிறகு 1933-ஆம் ஆண்டு, சரவாக் இராச்சியத்தின் (Kingdom of Sarawak) ஆட்சிக் காலத்தில் மிரி நகராட்சிக் கழகம் (Municipal Order M-7) நிறுவப்பட்டது.

சரவாக்கின் 4-ஆவது பிரிவின் ஆளுநராக இருந்தவர், மிரி நகராட்சிக் கழகத்தின் தலைவரானார். மற்றும் பல சமூகத் தலைவர்களும் அந்தக் கழகத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

பிரித்தானிய போர்னியோ

தொகு

1941 முதல் 1945 வரை சரவாக்கில் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு (Japanese occupation of British Borneo); அப்போது மிரி நகராட்சிக் கழகத்தின் செயல்பாடுகள் தடைபட்டன.[2]

1956 ஜனவரி 1-ஆம் தேதி, மிரி நகராட்சிக் கழகம் (Miri Municipal Board), மிரி நகர்ப்புற மாவட்டக் கழகமாக (Miri Urban District Council) மறுசீரமைக்கப்பட்டது. 17 நியமன உறுப்பினர்களைக் கொண்டு இருந்தது.[2]

20 மே 2005-இல் மிரி நகருக்கு மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் மிரி நகராட்சிக் கழகம் என்பது மிரி மாநகராட்சி என தகுதி உயர்த்தப்பட்டது.[3]

மிரி மாநகராட்சி முதல்வர்கள்

தொகு
# முதல்வர் தொடக்கம் முடிவு
1 வீ ஆன் வென் 20 மே 2005 22 சனவரி 2010
2 லாரன்சு லாய் இயூ சான் 23 சனவரி 2010 30 சூன் 2016
3 ஆதாம் இயி சியூ சங் 1 சூலை 2016 ஆதாம் இயி சியூ சங்

மாநகராட்சி உறுப்பினர்கள்

தொகு
  1. ராபர்ட் ஆயூ
  2. செப்ரி பாங் சியாவ் பூங்
  3. எர்னஸ்ட் கோ கியோக் செங்
  4. முகமது சர்டன் சைனல்
  5. பீட்டர் சியா சாவ் கியோங்
  6. குவே சி தியோங்
  7. ரெக்சால் கில்லாம்
  8. கில்பர்ட் சின் யுங் உவா
  9. வார்சிடியா அகமது
  10. லீ தின் இன்
  11. அப்துல்லா சைனி
  12. ஓங் சீ இயீ
  13. சோனா பிங் எங் ஓயோக்
  14. யாப் சியூ சின்
  15. சான் சாய் பிங்
  16. புய் யோங் பேன்
  17. மேத்யூ பென்சன் மவுன்சி
  18. ரந்தை அச்சின்
  19. லியோங் சின் லிம்
  20. அரிபின் முகமது
  21. பகவான் சிங்
  22. கீத் சின் சியுன்
  23. கரம்பீர் சிங் தேன்
  24. மிசியா அப்துல்லா @ எமிஸ் பெருடி
  25. அபிங் தெராங்
  26. டொமினிகா லூசியா திங்காங்
  27. டொமினிக் நியுராங் அசாங்
  28. டேவிட் இசுடீபன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Our profile". Official Website of Miri City Council. Official Website of Miri City Council. 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  2. 2.0 2.1 "Background". Official Website of Miri City Council. Official Website of Miri City Council. 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.
  3. "Miri Council ... in Brief". Official Website of Miri City Council. Official Website of Miri City Council. 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 7 September 2014.

வெளி இணைப்புகள்

தொகு

04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E / 4.39250; 113.98611

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரி_மாநகராட்சி&oldid=3941238" இலிருந்து மீள்விக்கப்பட்டது