மீசைக் குக்குறுவான்

மீசைக் குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. இன்காக்னிடசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் இன்காக்னிடசு
(ஹியூம், 1874)
வேறு பெயர்கள்

சைனாப்சு இன்காக்னிடசு
மெகாலைமா இன்காக்னிடசு

மீசைக் குக்குறுவான் (சைலோபோகன் இன்காக்னிடசு) ஆசியக் குக்குறுவான் சிற்றினம் ஆகும். குக்குறுவான்கள் என்பது உலகளாவிய வெப்பமண்டல பகுதியில் பரவிக் காணப்படும் பாசரைன் பறவைகளின் குழுவாகும். இவை தனது கனமான அலகுகளின் விளிம்பில் இருக்கும் முட்கள் மூலம் தங்கள் பெயரைப் பெற்றன.

வாழிடம்

தொகு

மீசைக் குக்குறுவான் மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மலைப்பகுதிகளில் வசிக்கும் பறவையாகும். இது 600-700 மீ உயரமுள்ள பரந்த இலைகள் கொண்ட பசுமையான காடுகளில் காணப்படும் இனமாகும். இது மரத்தின் குழியில் கூடு கட்டுகிறது.

 
தலை (கீழே), ஜோசப் ஸ்மிட் எழுதிய விளக்கம், 1891

உடலமைப்பு

தொகு

இந்த குக்குறுவானின் உடல் நீளம் 23 செ.மீ. ஆகும். இது குட்டையான கழுத்து, பெரிய தலை மற்றும் குட்டையான வால் கொண்ட பருத்த பறவை. அலகு கருமையான கொம்பு போன்றது. உடல் இறகு பச்சை நிறமுடையது. ஆண் பெண் பறவைகள் பாலின வேறுபாடின்றி ஒரே மாதிரியானவை. ஆனால் இளம் வயதினருக்கு மந்தமான, பச்சை நிற தலை மற்றும் தொண்டை குறுகிய மீசை உள்ளது.

துணையினம்

தொகு

மீசைக் குக்குறுவானின் துணையினங்கள் சை. இ. இன்காக்னிடசு மியான்மர் மற்றும் மேற்கு தாய்லாந்திலும் சை. இ. யூரோசு கிழக்கு தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாமில் காணப்படும்.

குரல்

தொகு

ஆணின் பிராந்திய அழைப்பு, மீண்டும் மீண்டும் உரத்த சத்தமாக உயிக்-அ-ருக் உயிக்-அ-ருக் என்பதாக அமையும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Psilopogon incognitus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681646A92915252. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681646A92915252.en. https://www.iucnredlist.org/species/22681646/92915252. பார்த்த நாள்: 20 November 2021. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசைக்_குக்குறுவான்&oldid=3788779" இலிருந்து மீள்விக்கப்பட்டது