மீதூதியம் என்பது (Bonus payment) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திற்கு முன்பு வரை தொழிலாளர்களுக்கு வார ஊதிய முறை பின்பற்றப்பட்டது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொழிலாளர்களுக்கு நான்கு வாரங்களுக்கு ஒரு முறை என மாத ஊதியம் முறை ஏற்படுத்தப்பட்டு ஓர் ஆண்டிற்கு பன்னிரண்டு மாதம் ஊதியம் வழங்கப்பட்டது. தொழிலாளர்கள் நான்கு வாரத்திற்கு ஒரு முறை ஊதியம் என்று கணக்கிட்டு வருடத்திற்கு 13 முறை ஊதியம் வேண்டும் என்று 1930-1940 [1] களில் மகாராஷ்டிரா மாநில தொழிற்சங்க ஊழியர்கள் தங்கள் ஒரு மாத ஊதியம் வழங்காமல் ஆங்கிலேய அரசு வஞ்சிக்கப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஆங்கிலேய அரசு இந்தியாவின் புகழ்பெற்ற விழாவான தீபாவளியை முன்னிட்டு அந்த ஒரு மாத ஊதியத்தை மீதூதியமாக வழங்குவதாக அறிவித்து அதை நடைமுறைபடுத்தினர், இதுவே மீதூதியம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வழக்கம் தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் அரசுகளால் ஊழியர்களுக்கு விழா காலங்களில் மீதுதியம் வழங்கி பின்பற்றப்படுகிறது. [2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீதூதியம்&oldid=3224900" இலிருந்து மீள்விக்கப்பட்டது