மீனா ராணா (Meena Rana) இவர் ஓர் பிரபல உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பாடகி ஆவார். இவர் பல கர்வாலி மற்றும் குமாவோனி இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். [1] இவர் இந்திய மாநிலமான உத்தராகண்ட் மாநிலத்தின் சிறந்த பெண் பாடகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் லதா மங்கேஷ்கர் மற்றும் உத்தராகண்டின் சுர் கோகிலா என்றும் கூறப்படுகிறது [2] ஆனால் பாடுவதற்காக எந்தவிதமான முறையான பயிற்சியையும் இவர் பெறவில்லை. [3] இவர் இந்தியா மட்டுமல்லாமல் ஓமன், அரபு அமீரகம் மற்றும் ஆத்திரேலியா போன்ற நாடுகளில் தனது நிகழ்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மீனா ராணா 1975 மே 24 அன்று தில்லியில் பிறந்தார். தில்லியின் பேட்லர் நினைவு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். இவர் தனது 9 ஆம் வகுப்பு வரை தில்லியில் தங்கியிருந்தார். ஆனால் பின்னர் இவர் தனது மூத்த சகோதரியுடன் உத்தரகண்ட் மாநிலத்தின் முசோரிக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் மகளிர் பள்ளியில் தனது படிப்பினைத் தொடர்ந்தர். மீனா தில்லி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பினை முடித்தார். இவர் சஞ்சய் கோமோலா என்பவரை 2001இல் மணந்து கொண்டு தில்லியில் மீண்டும் குடியேறினார். இவர்களுக்கு சுரபி மற்றும் பாரி என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். மீனாவிற்கு உமா என்றொரு சகோதரியும், மோகன் என்றொரு சகோதரனும் இருக்கிறர்கள். இவரது கணவர் ஒரு இசை இயக்குனர் ஆவார். அவர் 'சுரபி மல்டி ட்ராக் சவுண்ட்' என்ற பெயரில் ஒரு இசை நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்து நிறுவனத்திற்கு இவர்களின் மகள் சுரபியின் பெயரிடப்பட்டது. மீனா பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவற்றில் உத்தரகண்ட் மாநிலத்தின் அழகை விவரிக்க முயன்றுள்ளார். [4]

நிகழ்ச்சி தொகு

இவர் தனது முதல் நேரடி நிகழ்ச்சியை முசௌரி, அனைத்திந்திய வானொலிச் சங்கத்தில் நிகழ்த்தினார். இது இவருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. இவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது “நௌனி பிச்சாடி நௌனி” என்ற தனது திரைப்படத்தில் மூன்றுப் பாடல்களை பாடினார். [5] நாட்டுப்புற பாடகர்களான மணி பாரதி மற்றும் புரான் சிங் ராவத் ஆகியோர் இவரை அனைத்திந்திய வானொலிச் சங்கத்தில் கண்டறிந்து, அவர்களது கர்வாலி திரைப்படமான “நௌனி பிச்சாடி நௌனி” என்ற தங்களதுத் திரைப்பட (1991) இல் பாட வைத்தனர். [6]

மீனா கர்வாலி, குமாவோனி, ஜான்சாரி, ஜான்புரி, போஜ்புரி, ராஜஸ்தானி, கர்கலி, பால்டி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். மேலும் லடாக்கியில் 500 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார். [7]

இசைத் தொகுப்புகள் தொகு

உதரகாண்டி இசைத் தொகுப்புகள் 1) சந்த் தரோ மா 2) மேரி காதி மித்தி 3) தர்பார் நிரலா சாய் கா போன்றவை. உத்தராகண்டி கர்வாலி இசைத் தொகுப்புகள் 1) தேரி மேரி மாயா 2) மேரு உத்தராகண்ட் 3) சில்பிலாத் 4) மோகனா 5) சந்திரா 6) லலிதா சி ஹம் ஆகியன.

விருதுகள் தொகு

மீனா, உத்தராகண்ட் இளம் பெண் பாடர்களுக்கான சிறந்த பாடகர்களுக்கான விருதுகளைத் தொடர்ச்சியாக 2010, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

குறிப்புகள் தொகு

  1. "Music in Uttaranchal - Garhwali and Kumaoni Uttarakhand Pahari Music". Euttaranchal.com. Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-29.
  2. https://starsunfolded.com/meena-rana/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
  6. https://starsunfolded.com/meena-rana/
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_ராணா&oldid=3567785" இலிருந்து மீள்விக்கப்பட்டது