மீரு தல்வாலா

பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவரில் உள்ள இந்திய உணவகங்களான விஜ் மற்றும் ரங்கோலியின் முன்னாள் கணவர் விக்ரம் விஜ் உடன் மீரு தல்வாலா (Meeru Dhalwala )சமையல்காரர் மற்றும் இணை உரிமையாளராக உள்ளார். இவர் ஓர் எழுத்தாளர் ஆவார். [1] [2] [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மீரு தல்வாலா இந்தியாவில் பிறந்தார் . இவர் இளமையாக இருந்த சமயத்தில் இவளர் பெற்றோருடன் வாஷிங்டன் டிசிக்கு குடிபெயர்ந்தார். மனித உரிமைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பல்வேறு சர்வதேச இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் பணிபுரிந்த இவர் டிசியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார், மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். [4] [5]

தொழில் வாழ்க்கை தொகு

பிப்ரவரி 1995 இல், தால்வாலா தனது கணவர் விக்ரம் விசுடன், பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவரில் சேர்ந்தார். இவர் சமையலறையை நிர்வகிக்கத் தொடங்கினார் மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட உணவகமான விஜ்ஸின் சமையல் குறிப்புகளை உருவாக்கினார். [4] ஆரம்ப காலத்தில் இவரது கணவனின் பெற்றோர் தங்கள் வீட்டில் கறியை தயாரித்து பேருந்தில் உணவகத்திற்கு வழங்குவார்கள். [6] [7] 2003 வாக்கில், நியூயார்க் டைம்ஸின் மார்க் பிட்மேன் விஜின் உணவகத்தை "உலகின் மிகச்சிறந்த இந்திய உணவகங்களில் ஒன்றாகும்" எனப் பாராட்டினார். [8] [9]

2004 ஆம் ஆண்டில், தால்வாலா மற்றும் விஜ் ரங்கோலி என்ற இரண்டாவது உணவகத்தினை துவங்கினர். [4] இரண்டு உணவகங்களிலும் அனைத்துமே பெண் சமையலறை ஊழியர்களாக இருப்பதாக அறியப்படுகிறது, [2] [10] [11] அந்தப் பெண்கள்அனைவரும் இந்தியாவின் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள். [4] [5] தால்வாலாவும் இவளது சமையல்காரர்களும் புதிய நுட்பங்கள் மற்றும் மசாலா சேர்க்கைகள் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.இவர்களின் தயாரிப்புகள் வரி பிரிட்டிசு கொலம்பியா மற்றும் பிற பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படுகிறது. [4] [5]

நவம்பர் 2012 இல், தால்வாலா வாஷிங்டனின் சியாட்டில் ஷானிக் என்ற புதிய உணவகத்தைத் தொடங்கினார். [12] [13] வான்கூவரில் உள்ள விஜின் நிறுவனங்களுக்கான நிதி மற்றும் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் ஓகுஸ் இஸ்தீஃப் உடன் இந்த திட்டம் இருந்தது. ஷானிக் ஒரு இந்திய உணவகமாக இருந்தது, இவளுடைய விஜ் மற்றும் ரங்கோலி உணவுப் பட்டியல்களில் வேறுபட்டது. [14] [15] ஷானிக் மார்ச் 2015 இல் மூடப்பட்டது. [16]

டால்வாலா மற்றும் விஜ் இணைந்து இரண்டு சமையல் புத்தகங்களை வெளியிட்டனர், [4] [17] 2006 இல், தால்வாலா முதல், விஜ்'ஸ்: எலெகண்ட் அண்ட் இன்சுபயர்டு இண்டியன் குசைன் எனும் நூலினை எழுதினார், [18] இது 2007 இல் பல விருதுகளையும் வென்றது. இதில், கனடாவின் சிறந்த சமையல் புத்தகம் மற்றும் கோர்டன் டி'ஓர் கோல்ட் ரிப்பன் சர்வதேச சமையல் புத்தக விருது ஆகிய குறிப்பிடத்தகுந்தது ஆகும். [19] [20] புத்தக வடிவமைப்பில் சிறந்து விளங்கும் அல்குயின் சொசைட்டி விருதுகளின் குறிப்புப் பிரிவில் இந்தப் புத்தகம் முதல் இடத்தைப் பிடித்தது. [21] 2010 இல், இவர் விஜஸ் அட் ஹோம்: ரிலாக்ஸ் ஹனி, [22] நூலினை வெளியிட்டார். இது இந்தியாவின் சிறந்த உணவு நூலாக கோர்மண்ட் உலக சமையல் புத்தக விருதுப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது [19] மற்றும் கனடிய சமையல் புத்தக விருதுகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். [23]

மேற்கோள்கள் தொகு

  1. "The Insider's Guide: Vikram Vij and Meeru Dhalwala take you through Vancouver"[தொடர்பிழந்த இணைப்பு], National Post, June 12, 2009.
  2. 2.0 2.1 "The Cheat: The Greens Party", New York Times, November 3, 2010.
  3. "Bug Appetit! Insects as Ingredients", Nightline, July 23, 2008.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Meeru Dhalwala". D & M Publishers. Archived from the original on ஜூன் 17, 2012. பார்க்கப்பட்ட நாள் July 26, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 5.2 "Judges: Meeru Dhalwala". Better Together. பார்க்கப்பட்ட நாள் September 11, 2012.
  6. "Vancouver chef reinvents Indian food", Toronto Star, September 3, 2009.
  7. "Flavours of Vij's excellent adventure", Vancouver Sun, September 20, 2006.
  8. Bittman, Mark (8 August 2003). "JOURNEYS; 36 Hours - Vancouver, British Columbia". The New York Times. பார்க்கப்பட்ட நாள் July 26, 2008.
  9. Suen, Renée (Mar 11, 2011). "Q&A with Vikram Vij: the celebrated Vancouver chef on his successes and why he won't open a restaurant in Toronto". Toronto Life. Toronto Life Publishing Company Ltd. Archived from the original on March 14, 2011. பார்க்கப்பட்ட நாள் Jul 26, 2012.
  10. "Eat, Play, Love" பரணிடப்பட்டது 2013-01-05 at Archive.today, Western Living, September 2, 2010.
  11. "If Meals Won Medals", New York Times, February 2, 2010.
  12. "Vij’s family of restaurants expands to Seattle" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Vancouver Sun, May 9, 2012.
  13. "New Indian restaurant by 'world's best' Vij's coming to Seattle", Seattle Times, May 10, 2012.
  14. Vulcan Real Estate (May 10, 2012). "Shanik Restaurant to Open in South Lake Union" (PDF) (press release). பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. Vermillion, Allecia (May 7, 2012). "Meeru Dhalwala, Culinary Force Behind Vij's, Is Opening a Seattle Restaurant". SeattleMet. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
  16. "Vij's Sibling Shanik Closes in South Lake Union | Seattle Restaurants".
  17. "From haute to cricket cuisine", CBC News, June 23, 2008.
  18. . 
  19. 19.0 19.1 "More than Recipes: Inspired Food Writing with Meeru Dhalwala". The Tyee. 13 February 2012. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
  20. "Vij's: Elegant and Inspired Indian Cuisine". D & M Publishers Inc. Archived from the original on பிப்ரவரி 22, 2013. பார்க்கப்பட்ட நாள் July 26, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "Indian Cuisine at the Top of the List". D & M Publishers Inc. 5 November 2007. Archived from the original on 26 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் July 26, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. . 
  23. "Vij's At Home: Relax, Honey". D & M Publishers Inc. Archived from the original on ஜூலை 17, 2012. பார்க்கப்பட்ட நாள் July 26, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரு_தல்வாலா&oldid=3791539" இலிருந்து மீள்விக்கப்பட்டது