முகமது சுபைர் கான்

டாக்டர் முகமது சுபைர் கான் (ஆங்கிலம்: Mohammad Zubair Khan ) பாக்கித்தானைச் சேர்ந்த பொருளாதார மேதையாவார். இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலக வங்கியில் சிலகாலம் பணியாற்றிய பின்னர், 1981 முதல் 1992 வரை சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றினார், வடக்கு ஐரோப்பா மற்றும் துருக்கியில் உள்ள தொழில்துறை நாடுகள், தெற்காசியாவில் வளரும் நாடுகள், மத்தியகிழக்கு மற்றும் தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இவர் பணியாற்றினார்.

பொருளாதார ஆலோசனை தொகு

பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதிலிருந்து, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், சர்வதேச ஒத்துழைப்புக்கான சப்பான் வங்கி மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் போன்றவற்றிக்கு, பெரிய பொருளாதார சூழலை உறுதிப்படுத்தல் கொள்கைகள், பணவியல் கொள்கை, வர்த்தகம் மற்றும் பரிமாற்ற வீத சிக்கல்கள், நிதி மற்றும் வெளி கடன் நிலைத்தன்மை, நிதி கூட்டாட்சி, வரி நிர்வாகம் மற்றும் வறுமை தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல்வேறு சிக்கல்களில் இவர் ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் தற்போது எகிப்து மற்றும் இலங்கையின் மத்திய வங்கிகள், லாகூரில் உள்ள தேசிய பொது நிர்வாக நிறுவன (நிபா) வளாகம், பாக்கித்தான் நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அவர் விரிவுரை செய்கிறார்.

பல்வேறு பணிகள் தொகு

முகமது சுபைர் கான் சிலகாலம் பாக்கித்தானின் வர்த்தக அமைச்சராக இருந்துள்ளார் [1] மேலும் உலக வர்த்தக அமைப்பின் முதல் அமைச்சரவை மாநாட்டில் பாக்கித்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். தற்போது, ஆலோசனைக்கு கூடுதலாக, கான் தேசிய நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும்,[2] பாக்கித்தான் அரசாங்கத்தின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் ஆலோசனைக் குழுவிலும், பாங்க் ஆப் கைபரின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் வடமேற்கு எல்லைப்புற மாகாண அரசாங்கத்தின் மாகாண நிதி ஆணையம் என்பதிலும் உறுப்பினராக உள்ளார். சீனாவின் ஹைனானில் ஆசியாவிற்கான போவோ அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

முகமது சுபைர் கான் தற்போது சர்வதேச நிதி நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக.உள்ளார். அவரது நேரான பேச்சு மற்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு காரணமாக, அவர் தொலைகாட்சியில் பிரபலமான விருந்தினராக உள்ளார்.

குடும்பம் தொகு

இவர் பாக்கித்தான் இயக்கத்தின் முக்கிய வீரரான கான் பகதர் குலாம் கைதர் கான் ஷெர்பாவின் குடும்பத்தில் பிறந்த மறைந்த ஹயாத் ஷெர்பாவ் மற்றும் அப்தாப் ஷெர்பாவோ ஆகியோரின் மூத்த சகோதரர் மறைந்த வாலி முகமது கானின் மகன் ஆவார்.

பாக்கித்தானின் செல்வாக்குமிக்க குடும்பங்களில் அவரது குடும்ப மரமும் வேறு சமூகங்களில் திருமணங்கள் செய்வது போன்றவை தனித்துவமானது . அவர் பாக்கித்தானின் முன்னாள் அதிபர், மறைந்த சர்தார் பாரூக் அகமது கான் இலெகாரி மற்றும் சுமேரா மாலிக் மற்றும் அய்லா மாலிக் (கலாபாக்கின் மாலிக் அமீர் முகமது கானின் பேத்திகள்) ஆகியோரின் உறவினர் மற்றும் மைத்துனர் ஆவார். அவர் தொலைத்தொடர்பு அமைச்சராகவும், தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செனட்டர் ஜமால் இலெகாரி மற்றும் அவிஸ் லெகாரி ஆகியோரின் மாமா ஆவார்.

குறிப்புகள் தொகு

  1. Hiel, Betsy (18 February 2008). "Pakistanis hope for change with elections". Pittsburgh Tribune-Review. http://www.pittsburghlive.com/x/pittsburghtrib/s_552848.html. பார்த்த நாள்: 22 April 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Haider, Zamir (14 November 2003). "Musharraf reconstitutes NFC". Daily Times (Pakistan). http://www.dailytimes.com.pk/default.asp?page=story_14-11-2003_pg7_2. பார்த்த நாள்: 22 April 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சுபைர்_கான்&oldid=3225035" இலிருந்து மீள்விக்கப்பட்டது