முகம்மத் ஆசிக்

முகம்மத் ஆசிக் ஓர் உலக சாதனை படைத்தவர் [1] மற்றும் ஓர் இந்தியா சிறுமுது அறிஞர். இவர் தனது ஆறு வயதில் உலக வரைபடத்தை நினைவில் வைத்தார். [2] இவர் ஒரு சொற்பொழிவாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்.

முகம்மத் ஆசிக்
முகம்மத் ஆசிக் உரையாற்றுகிறார்.
பிறப்பு25 ஜனவரி 2004
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநிறுவனர் IPEDO, சமாதான செயல்ப்பாட்டளர், பேச்சாளர்
அமைப்பு(கள்)சர்வதேச சமாதான மற்றும் பொருளாதார மேம்பட்டு அமைப்பு
அறியப்படுவதுஉலக சாதனையாளர், சமாதான செயல்பாட்டாளர்
விருதுகள்உலக சாதனை படைத்தவர்

வாழ்க்கை தொகு

குழந்தைப் பருவம் தொகு

ஆசிக் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியா மாநிலமான தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் 195 நாடுகளை வெற்று உலக வரைபடத்தில் மூன்று நிமிடங்களில் சுட்டிக்காட்டி உலக சாதனை படைத்தார்.[3]

சாதனைகள் தொகு

உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் செய்தி கட்டுரைகளில் இவருக்கு "புகைப்பட நினைவகம்" என முடிசூட்டப்பட்டார். [4] இவர் அகில இந்திய சொற்பொழிவு போட்டிகளில் நான்கு வயதிலிருந்தே கலந்துக் கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். [5] போகோ தொலைக்காட்சி இந்தியாவின் மும்பையில் நடத்திய போகோ அமேசிங் கிட்ஸ் விருதுகள் 2011 இல் இவருக்கு "ஜீனியஸ்" பட்டம் வழங்கப்பட்டது. [6] இவர் பல்வேறு பார்வையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கி வருகிறார். மேலும் இவர் ஏழு வயதிலிருந்தே சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பணியாற்ற ஊக்கமளித்து வருகிறார்.

 
முகமது ஆஷிக் போகோ அமேசிங் கிட்ஸ் "ஜீனியஸ்" விருதைப் பெறுகிறார்

சமாதான செயல்பாடு தொகு

ஆசிக் உலக சமாதான நடவடிக்கைகளை ஈடுப்பட்டார். இதன் காரணமக இவர் சர்வதேச அமைதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைப்பை நிறுவினர்.[சான்று தேவை]

குறிப்புகள் தொகு

  1. Karthikeyan, D. (2011-06-06). "Around the world..." (in en-IN). https://www.thehindu.com/features/kids/around-the-world/article2081594.ece. 
  2. InpaperMagazine, From (2012-03-24). "Shining stars: World's youngest record holders". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  3. "MohamMed Ashik Youngest World Map Recogniser". Dainik Bhaskar (in இந்தி). 2012-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  4. "August - 2011". Issuu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  5. "Young Talent". 
  6. Bureau, Our. "Pogo Amazing Kid Genius Award 2011". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மத்_ஆசிக்&oldid=3040459" இலிருந்து மீள்விக்கப்பட்டது