முகுல் ராய்

முகுல் ராய் (Mukul Roy, வங்காள: Mকুল রায়; பிறப்பு 17 ஏப்ரல் 1954) இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினருமாவார். அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசின் பொதுச் செயலாளரும் ஆவார். தற்போதைய நடுவண் அமைச்சில் இரயில்வேத்துறை அமைச்சராக மார்ச்சு 20 அன்று பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பாக இரயில்வேத்துறையின் இணை அமைச்சராகவும் கப்பல்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 2021-இல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகுல் ராய் பொதுக் கணக்குக் குழு தலைவராக செயல்பட்டார். பின்னர் சூலை 2021-இல் அப்பதவியிலிருந்து விலகினார். [1]பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முகுல் ராய்
Mukul Roy.png
இரயில்வேத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 மார்ச்சு 2012
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் தினேஷ் திரிவேதி
கப்பல்துறை இணை அமைச்சர்
பதவியில்
22 மே 2009 – 19 மார்ச்சு 2012
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் கே. எச். முனியப்பா
இரயில்வேத்துறை இணை அமைச்சர்
பதவியில்
20 மே 2011 – 11 சூலை 2011
உடன் பணியாற்றுபவர் கே. எச். முனியப்பா
பாரத்சிங் சோலங்கி
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் ஈ. அகமது
நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்
பிரதமர் மன்மோகன் சிங்
தொகுதி மேற்கு வங்காளம்
தனிநபர் தகவல்
பிறப்பு முகுல் ராய்
17 ஏப்ரல் 1954 (1954-04-17) (அகவை 68)
காஞ்சிரப்பரா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கிருஷ்ணா ராய்
பிள்ளைகள் சுப்ரான்ஷு
இருப்பிடம் புது தில்லி (அலுவல்)
கொல்கத்தா (தனிப்பட்ட)
பணி அரசியல்வாதி
சமயம் இந்து
இணையம் Mukul Roy

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முகுல் ராய் இந்திய அரசின் புலனாய்வு அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டவர். [2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுல்_ராய்&oldid=3497266" இருந்து மீள்விக்கப்பட்டது