முக்கொம்பு சுற்றுலா தலம்

அறிமுகம்தொகு

முக்கொம்பு ஒரு அழகான சுற்றுலா தலம். இது திருச்சியில் இருந்து 8 கி.மீ. தொலைவில்ல உள்ளது. காவிரி நதிக்கரையில் உள்ள கொள்ளிடத்திற்கு அருகில் உள்ளது.

முக்கொம்பிலுள்ள பொழுது போக்கு அம்சங்கள்தொகு

பொழுது போக்கு பூங்கா. படகு சவாரி. மீன் பிடித்தல். குழந்தைகள் பூங்கா. குரம்பத் தோட்டம்.

வசதிகள்தொகு

சிற்றுண்டிகள். குளிர் பானங்கள். வாகனங்கள் அனுமதி உண்டு.

செல்லும் வழி

திருச்சியில் இருந்து சத்திரம் செல்லும். பேருந்துகள் முக்கொம்பு பெருகமணி ரயில்வே நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன்.

முக்கொம்பின் சிறப்புகள்தொகு

ரம்மியமமான இடம். குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக பொழுது போக்கக் கூடிய இடம். செலவு மிக குறைவான இடம். வருடம் முழுவதும் தட்பவெப்பம் நன்றாக இருக்கும். போக்குவரத்து வசதி மிகவும் எளிது. இந்த இடத்தை தமிழ்நாடு சுற்றுலாத்தலம் சிறந்த சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இடத்திற்கு செல்வதன் மூலம் ஸ்ரீரங்கம், தஞ்சாவூர்,திருச்சி, சமயபுரம், திருவானைக்காவல், கல்லனை ஆகிய மிக அருமையான தலங்களை கண்டு களிக்கலாம்.

ஆடிப்பெருக்கு விழாதொகு

  • ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், படித்துறை அருகில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.