முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை அல்லது வியன்னா பேப்பிரசு உடன்படிக்கை என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின் துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். இந்த உடன்படிக்கை கிரேக்க மொழியில் பேப்பிரசு தாளில் எழுதப்பட்டுளது. 1980ல் எகிப்து நாட்டில் கண்டறியப்பட்டு தற்போது வரை வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுளது.[1] இந்த கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகின்றன. இதில் கங்கைச் சமவெளியிலுள்ள இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டுள்ளதாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எழுதிய வணிகர் ரோமப் பேரரசுக்கு பணிந்து தான் கொண்டு செல்லும் பொருட்களுக்கு தானே உத்தரவாதம் தருவது போல் இதை எழுதியுள்ளார். இந்த உடன்படிக்கை கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு பண்டைய ரோம் மற்றும் சங்ககாலச் சேரர் பற்றி அறிய விரும்பிய தொல்லியல், வரலாற்றியல், சட்டவியல், நிர்வாகவியல், பொருளாதாரவியல் போன்ற துறை வல்லுநர்களுக்கு பெரிய திருப்புமுனையாய் அமைந்தது.[2]

முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை

உடன்படிக்கை தொகு

இந்த உடன்படிக்கையின் மேல் புறமும் கீழ் புறமும் கிடைக்கவில்லை. அதனால் அவ்வணிகர்களின் பெயரையும் அறிய முடியவில்லை. இதன் முன்பக்கத்தில் உடன்படிக்கை ஒப்புதலும் பின்பக்கத்தில் இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் எடை அளவைகளும் தரப்பட்டுள்ளது. அந்த கிரேக்க மொழி உடன்படிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு,

முன் பக்கம் தொகு

பின்பக்கம் தொகு

இதில் வடகங்கையிலிருந்து வந்த 60 பெட்டிகள் விலை ஒரு பெட்டிக்கு 45 வெள்ளி தாலந்து (டேலன்ட்) வீதம் 60க்கு 4500 திரமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதில் காணப்படும் எடை மற்றும் பண அளவீடுகள்,

 1. எகிப்திய டேலன்ட் (எடை) = 54.5 மினா (எடை)
 2. டெரார்ட் டேலன்ட் (எடை) = 43 மினா (எடை) = 70 லிட்ரா (பணம்)
 3. மினா (எடை)
 4. திரமம் (பணம்)
 5. லிட்ரா (பணம்)

மதிப்பீடு தொகு

இந்த கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட 5,00,000 கிலோ செல்வத்தைக் கொண்டு தற்போதைய நைல் நதியைச் சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம் என்று காசன் என்ற பொருளியல் வல்லுநர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.[4] இன்னொரு ஆய்வாளாரான ஃபெடரிக்கோ ரோமானிசு என்றவர் இச்சரக்கின் மதிப்பு 68,000 ரோமானிய, எகிப்து தங்கக்காசுகளுக்கு சமம் எனத் தெரிவித்துள்ளார்.[4] ஒரு சரக்குப் பரிமாற்றத்தின் மதிப்பே இவ்வளவு நிலத்தின் மதிப்புக்கு ஈடாகும் என்றால் மொத்த வணிகர்களின் ஒட்டுமொத்தப் பரிமாற்றமும் எவ்வளவு மதிப்பு உடையதாய் இருக்கும் என்று நினைக்க வியப்பாய் உள்ளது என்பது காசன் கூற்று.[5]

முடிவுகள் தொகு

 • இதில் இவ்வணிகர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை ஆயினும் செங்கடல் துறைமுகங்களில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் கோற்பூமான், கணன், சாதன் போன்ற பழந்தமிழ் வணிகப்பெயர்கள் காணப்படுவதால் இந்த வணிகர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வுடன்படிக்கையில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.[6]
 • இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு சங்ககாலத் தமிழகத்திலும் பண்டைய ரோம் பண்டைய எகிப்து ஆகிய இடங்களிலும் ஒரு முறையான வணிக நடைமுறை இருந்ததை அறியலாம்.
 • முசிறி போன்ற துறைமுகப்பட்டினங்களில் கடன் ரசீதுகள், கடன் பரிமாற்ற ஒப்பந்தங்கள் போன்றவற்றை கண்காணிக்க அலுவலகம் போன்றவை இருந்ததை அறிய முடிகிறது.
 • இந்த ஒப்பந்தம் சங்க காலத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் இருக்கவில்லை என்று கூறும் அறிஞர்களுக்கு தகுந்த எதிர்ப்பு வாதமாய் அமைந்தது.

மேற்கோள்கள் தொகு

 1. Mathew, N.M. History of the Marthoma Church (Malayalam), Volume 1.p.28. (2006), Pub. E.J.Institute, Thiruvalla.
 2. For the full text in Greek and its translation, see http://www.uni-koeln.de/phil-fak/ifa/zpe/downloads/1990/084pdf/084195.pdf
 3. Harraruer, H and Sijipesesteiju, P, 1985, "Ein Neues Dokument Zu RomS Indian handel P.Vindob G. 40822", Anzhien, 122, pp. 124-1255
 4. 4.0 4.1 ஏ. சிறிவத்சன் (மே 02, 2010). "In search of Muziris". இந்து தி இந்து. (Web link). Retrieved on சூன் 01, 2012. பரணிடப்பட்டது 2012-01-15 at the வந்தவழி இயந்திரம்
 5. Ancient Naval Technology and the route to India. Delhi: Oxford University Press. 1991. 
 6. Institute of Asian Studies (Madras, India) (சனவரி 1994). "Muziri papyrus". Journal of the Institute of Asian Studies 12: Snippet view in google. doi:June 1, 2012. http://books.google.co.in/books?id=cHNtAAAAMAAJ&q=Muziri+papyrus&dq=Muziri+papyrus&hl=en&sa=X&ei=OqHIT82hEIizrAfF4J3SDg&ved=0CDYQ6AEwAA. 

மூலம் தொகு

 • முசிறி - அலெக்சாண்டிரியா வணிக உடன்படிக்கை; ஒரு தொல்லியல் பார்வை, முனைவர் கா.ராஜன் எழுதிய ஆய்வுக்கட்டுரை.

உசாத்துணை தொகு

 • தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார், தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.

வெளியிணைப்புகள் தொகு