முதலமட தொடருந்து நிலையம்

கேரள தொடருந்து நிலையம்

முதலமட தொடருந்து நிலையம் (நிலைய குறியீடு: MMDA, Muthalamada railway station) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு என். எஸ். ஜி -6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இந்த நிலையம் இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டம் முதலமட சிற்றூரில் அமைந்துள்ளது. இது பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடதில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கேரள மாநிலத்தின் பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கிளைப் பாதையில் அமைந்துள்ளது.

முதலமட
பயணிகள் வண்டி நிலையம்
முதலமட தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்முதலமட தெற்கு, கேரளம் 678534
இந்தியா
ஆள்கூறுகள்10°37′41″N 76°46′23″E / 10.6281°N 76.7731°E / 10.6281; 76.7731
ஏற்றம்150 மீட்டர்கள் (490 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுMMDA
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1898 (1898)
மின்சாரமயம்ஆம், ஒற்றைப் பாதை மின்மயமாக்கல்
அமைவிடம்
முதலமட is located in இந்தியா
முதலமட
முதலமட
இந்தியா இல் அமைவிடம்

வரலாறு

தொகு

பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையின் பிரிவானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4]

தொடருந்துகள்

தொகு

முதலமட தொடருந்து நிலையம் வழியாக தற்போது இயங்கிவரும் தொடருந்து சேவைகள் பின்வருமாறு:-

அஞ்சல் / விரைவு வண்டிகள்

தொகு
  • 56731-பாலக்காடு சந்திப்பிலிருந்து (PGT) திருச்செந்தூருக்கு (TCN)
  • 56732-திருச்செந்தூர் (TCN) முதல் பாலக்காடு சந்திப்பு (PGT) வரை

மேற்கோள்கள்

தொகு
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 15. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  2. "Indian Railways Living Atlas — India Rail Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
  3. 3.0 3.1 "CRS completes inspection of Pollachi–Palakkad BG line". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  4. "Pollachi – Palakkad BG line cleared for passenger train services". The Hindu: Mobile Edition. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.