முதலாம் புலிகேசி
முதலாம் புலிகேசி (Pulakesi I பொ.ஊ. 543–566) என்பவன் சாளுக்கிய மரபின் ஒரு அரசனவான். இவனுக்குப் பின்னர் இவன் மரபினர் மேற்கு தக்காணம் முழுவதும் உள்ளடக்கியிருந்த ஒரு பேரரசை ஆட்சி செய்தனர். மற்றும் அவருடைய மரபினர் கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியையும் ஆண்டனர். புலிகேசி கதம்பர் மரபினரை வெற்றிகொண்டு சாளுக்கியப் பேரரசை நிறுவினான். இவனுக்கு சத்யாச்சரியன், வல்லபன், தர்மமகாராஜன் போன்ற பட்டங்கள் இருந்தன.
புலிகேசிக்கு முன்
தொகுசாளுக்கியப் பதிவுகளில் இந்த மரபின் இரண்டு ஆரம்ப தலைவர்கள், ஜெயசிம்ம வல்லபன் (500-520) மற்றும் அவரது மகன், ரங்கரங்கன் (பொ.ஊ. 520-540) ஆகியோர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கதம்பர்கள் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் பற்றி கொஞ்சம்தான் தெரியவருகிறது.
சாளுக்கியப் பேரரசின் தோற்றம்
தொகுமுதலாம் புலிகேசி ரங்கரங்கனின் மகன் ஆவான். இவன் காலத்தில்தான் சாளுக்கிய மரபினர் சுயாட்சி பெற்றனர். சாளுக்கியப் பேரரசின் உண்மையான நிறுவனர் என்ற புகழைப் பெற்றான். இவன் வெற்றிகரமாக கதம்பர்களின் அதிகாரத்தை மீறித் தன்னாட்சி பெற்றான். இவன் வாதபியைத் (பாதமி) தனது தலைநகராக ஆக்கிக்கொண்டான் அங்கு ஒரு வலுவான மலைக் கோட்டை கட்டிக்கொண்டான். இந்தப் புதிய கோட்டை ஆறுகள் மற்றும் செங்குத்தான மலைகளால் சூழப்பட்டிருந்தது.
புலிகேசியால் அசுவமேத யாகம், இரண்யகர்பன், அக்னிஸ்தமா, வாஜ்பேயி, பவுஷ்யுவர்ணா, பவுண்டரிகா போன்ற வேள்விகள் செய்யப்பட்டதாக, சக 565 (பொ.ஊ. 543), .55 ஆண்டைய தனது வாதாபியின் தலைமைக் கல்வெட்டு மூலம் வழங்கப்படுகிறது அறியப்படுகிறது.
பேரரசின் பரப்பு
தொகுமுதலாம் புலிகேசி காலத்தில் சாளுக்கிய அரசு உடனடியாகப் பெரிதளவில் விரிவாக்கம் பெறவில்லை. எனினும் அவரது வெற்றிகளால் பேரரசின் எல்லை ஓரளவுக்கு விரிவு கண்டது. மேற்குக் கடற்கரையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததனால் அரபிக் கடலின் வணிகத் தடங்களால் ஆதாயம் கிடைத்தது.[1]
மேற்கோள்
தொகுமேலும் படிக்க
தொகு- Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
- Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
- South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/
- History of Karnataka, Mr. Arthikaje