முதல் லெயிட்டர் கட்டிடம்

முதல் லெயிட்டர் கட்டிடம், ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் வெஸ்ட் மொன்ரோ சாலையில் இருந்தது. 1879ல் தொடக்கக் கட்டுமான வேலைகளும், 1888ல் தொடர்ந்த வேலைகளும் இடம்பெற்றன.[1] அக்காலத்தில் இக்கட்டிடம் சிக்காகோ நகரின் கட்டிடக்கலை அடையாளச் சின்னமாக விளங்கியது. இது கட்டிடக்கலைஞர் வில்லியம் லீ பாரன் ஜென்னி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் பாரம் சுமக்கும் சுவர்கள் கிடையாது. இது அக்காலத்தில் ஒரு புதிய விடயம் ஆகும். இதன் முகப்பு 400 அடி நீளமும் 8 மாடிகள் உயரமும் கொண்டிருந்தது. தகட்டுக் கண்ணாடியினால் ஆன சாளரங்கள் இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் லெயிட்டர் கட்டிடம்
Formerly listed on the ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
கட்டியது: 1879
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
தெரியாது
தே.வ.இ.ப வில்
இருந்து நீக்கம்:
1972
தே.வ்.இ.ப 
குறிப்பெண்#:
70000910

உயரமான கட்டிடங்களில் தூய வடிவங்களைப் பயன்படுத்தும் போக்கைக் காட்டும் கட்டிடமாக லெயிட்டர் கட்டிடம் காணப்பட்டது. இவ்வாறான கட்டிடக்கலைத் தூய்மை தொடர்பில் லெயிட்டர் கட்டிடம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது எனலாம். உயரமான கட்டிடங்களுக்கு இருக்கவேண்டிய நான்கு அம்சங்கள் முதன்முதலாக இந்தக் கட்டிடத்தில் அடங்கியிருந்தன. கட்டிடத்தின் உயரம், இரும்பினாலான சட்டகக் கூடு, அமைப்புக் கூறுகளின்மீது சுடுமண் தகட்டுத் தீக்காப்பு, உயர்த்திகளைப் பயன்படுத்திய நிலைக்குத்துப் போக்குவரத்து. என்பன மேற்படி நான்கு அம்சங்கள்.

இக்கட்டிடம் 1972ல் இடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு