முதல் வகுப்புச் செயலி
கணினியியலில், ஒரு நிரல் மொழியில் செயலிகளை மாறிகள் போன்று பயன்படுத்தக் கூடியதாக இருந்தால் அதனை முதல் வகுப்பு செயலி ஆதரவு உள்ள நிரல் மொழி என்பர். அதாவது செயலியை ஒரு மாறியால் குறிக்க முடிந்தால், தரவுக் கட்டமைப்பில் சேமிக்க முடிந்தால், இன்னுமொரு செயலிக்கு காரணியாக அனுப்ப முடிந்தால், ஒரு செயலியின் பதிலாக திருப்பி அனுப்ப முடிந்தால் அச் செயலி முதல் வகுப்புச் செயலி ஆகும். முதல் வகுப்புச் செயலி ஆதரவு உள்ள மொழிகளில் செயலிகள் செயலி வகை உள்ள இன்னுமொரு தரவு வகையாகவே (a variable with a function type) கையாளப்படும்.